திமுக அணியிலிருந்து வன்னிய அடிகளார் விலகினார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாழப்பாடி ராமமூர்த்தியுடன் சேர்ந்திருந்த வன்னிய சமூகப் பிரமுகர் வன்னிய அடிகளார் அவரிடமிருந்துவிலகிவிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸைச் சந்தித்து அவருடன் சேர்ந்து விட்டார்.

வன்னிய சமுதாயத்தினரிடையே பிரபலம் ஆனவர் வன்னிய அடிகளார். இவர் சமீப காலம் வரை தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியுடன் சேர்ந்து செயல்பட்டு வந்தார்.

தற்போது சட்டசபைத் தேர்தல் வரவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் தனக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக்கும்அதிக சீட்டுக்கள் தரப்படும் என்று நம்பியிருந்தார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ, ஆளுக்கு ஒன்றுவாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறத் திட்டமிட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியுற்ற வன்னிய அடிகளார், வாழப்பாடியிடமிருந்து விலகி, டாக்டர் ராமதாஸிடம் சென்றுவிட்டார். புதன்கிழமை ராமதாஸை சந்தித்த அவர் தனது ஆதரவை அவரிடம் தெரிவித்தார்.

வன்னிய அடிகளாரைத் தொடர்ந்து வாழப்பாடியும் வெளியேறுவாரா என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+