எங்க ஊருக்கு பஸ் வந்திருச்சு...

Subscribe to Oneindia Tamil

வால்பாறை:

Bus For Valparaiகோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மலைப் பகுதி கிராமத்துக்குள்இந்தியா சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் முதல்முறையாக நுழைந்திருக்கிறது.

வால்பாறையை ஒட்டிய இந்தக் கிராமத்தில் ஏறக்குறைய. 2000 தோட்டத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள. சரியான சாலை இல்லாத காரணத்தால் அந்தபகுதிக்கு பேருந்தே வருவது கிடையாது.

தமிழகத்தை காங்கிரஸ் ஆண்டபோதும் வந்தது கிடையாது. தமிழகத்தை தூக்கிநிறுத்தியதாகக் கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக ஆட்சியிலும் இங்கு பஸ் வந்ததுகிடையாது.

இந்தக் கிராமத்து மக்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு நடந்தே தான் சென்றப வந்துகொண்டிருந்தனர்.

18 ஆண்டு காலம் அவர்கள் போராடிய பின் இப்போது தான் சாலையேபோடப்பட்டது. சாலையையடுத்து பேருந்தும் அந்த ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளது.

புதிதாக அமைக்ப்பட்டுள்ள வால்பாறை மலைப் பாதையில் 10 கொண்டை ஊசிவளைவுகள் உள்ளன. 4 பாலங்கள் உள்ளன. இதன் மூலம் அருகில் உள்ள நகரங்கள்,மற்றும் எஸ்டேட்டுகளுக்கு தோட்டத் தொழிலாளர்கள் சிரமமின்றி சென்று வராலம்.

செவ்வாய்க்கிழமை முதன் முதலாக பேருந்து வால்பாறை பகுதிக்கு வந்தது. ஊரேதிரண்டு நின்று ஆராவாரத்துடன் அந்த பஸ்சை வரவேற்றது. புதிய பாதை பேருந்துசேவைக்காக திறந்து வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சிதலைவர் சந்தானம்அறிவித்தார்.

அதன் பின் வால்பாறை மக்கள் இலவசமாக சிறிது தூரம் பேருந்தில் சென்று வரவும்அனுமதிக்கப்பட்டனர். எம்.எல்.ஏ. சிங்காரவேலு கொடியசைத்து பேருந்து சேவையைதுவக்கி வைத்தார்.

பேருந்து வசதி மேலும் அதிகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் கிராமமக்களிடம் உறுதி அளித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+