காங்கிரஸ் கட்சிப் பணத்தை சுருட்டினாரா இளங்கோவன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலில் போட்டியிட விரும்பி கட்சித் தொண்டர்கள் விண்ணப்பத்திற்காக கட்டிய ரூ. 47,000 பணத்தை தமிழ்நாடுகாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் அபகரித்துக் கொண்டு விட்டார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அன்பரசு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்பரசு வியாழக்கிழமை சென்னையில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூர் மாவட்டத்திலிருந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் கொடுத்திருந்த ரூ. 62,000பணத்தை நான் கட்சி அலுவலகத்தில் தரவில்லை என்றும், என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்கட்சித் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ளார்.

என்னிடம் எதுவும் கேட்காமல், தான்தோன்றித்தனமாக இவ்வாறு இளங்கோவன் பேசியுள்ளார். உண்மையில்,வசூலான பணம் ரூ. 44,000தான். அத்தோடு எனது பணம் ரூ. 3000 சேர்த்து வேலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கதிர்வேலு மூலம் இளங்கோவனிடம் கொடுத்துவிடச் சொல்லியுள்ளேன். அந்தப் பணத்தைத் தற்போதுஇளங்கோவன்தான் கையாடல் செய்து விட்டார்.

கட்சிக்காக வசூலான பணத்தைக் கணக்குக் காட்டாமல் தானே சுருட்டிக் கொண்டு விட்ட இளங்கோவன் மீது கட்சித்தலைமை உரிய நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+