2 நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்: எம்.எஸ்.கில்

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி:

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து இன்னும் இரண்டு நாட்களில்தெரிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கவுஹாத்தியில் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்காளம் மற்றும் பாண்டிச்சேரிக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கவுஹாத்தியில் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:

5 மாநிலங்களுக்கு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் புதிதாக அரசுப் பதவியில் சேர்ந்தவர்கள்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்புப் பணியில் அமர்த்தப்பட மாட்டார்கள்.

வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் எதிலும் ஈடுபடக் கூடாது என்று அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள்மற்றும் வாக்குச்சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்தல் நேரத்தின் போது முறைகேடுகள், வன்முறைகள் ஏதாவது நடந்தால் அதற்கு காவல் துறையினர்தான்பொறுப்பு. வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டு வருகிறது.

சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்உபயோகப்படுத்தப்படும்.

இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் கூறினார்.

இதற்கிடையே, ஆளும் அசாம் கனபரிஷத் பிரமுகர்கள் துப்பாக்கி முனையில் கள்ள ஓட்டுக்கள் போடமுயற்சிப்பார்கள் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் அசாமில் சரணடைந்த உல்பா தீவிரவாதிகளின் விவரம் குறித்து எம்.எஸ்.கில் போலீஸ் டைரக்டர்ஜெனரலிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+