தொகுதி குறித்துப் பேச காங்கிரஸ் குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுகவிடம் தங்களுக்கு ஒதுக்கப்படவுள்ள சட்டசபைத் தொகுதிகள் குறித்துப்பேசுவதற்காக 2 பேர் கொண்ட கமிட்டியை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வரும் சட்டசபைத் தேர்தலில் 15 சீட்டுக்கள்ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் எந்த தொகுதிகள் தங்களுக்குத் தேவை என்பது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுகவுடன்பேசுவதற்காக 2 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர் இளங்கோவன் மற்றும் முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், வியாழக்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் இவர்கள் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications