ராஜ்யசபா, லோக்சபா 7 வது நாளாக ஒத்திவைப்பு
டெல்லி:
நாடாளுமன்றம் கூடியதும் எதிர்க்கட்சிகள், ஆயுதப் பேர ஊழலுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று வாஜ்பாய் பதவிவிலக வேண்டும் என்று சபை நடுவில் வந்து கூச்சலிட்டதால் அவை 7 வது நாளாக வியாழக்கிழமையும் அவைஸ்தம்பித்தது.
தெஹல்கா டாட் காம் இணையதளம் ஆயுதப் பேர ஊழலை வெளிக் கொண்டு வந்ததையடுத்து 7 வது நாளாகசபையை நடக்கவிடாமல் தடுத்தனர் எதிர்க்கட்சியினர்.
முதலில் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள், வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று கோஷமிட்டுக் கத்தினர்.
எதிர்க்கட்சிகள் கோஷம் கட்டுக்கடங்காமல் போனதையடுத்து, ஆளும் கட்சி எம்.பி.க்களும் சபை நடுவே வந்துசோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என்று கூறி கூச்சல் போட்டுக் கத்தினர்.இதையடுத்து சபாநாயகர் பாலயோகி சபையை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.
ராஜ்யசபாவிலும் இதே நாடகம்தான் அரங்கேறியது. ராஜ்யசபா அவைத் தலைவர் கிருஷ்ணகாந்த் அவைக்குவந்ததும், காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா கட்சி எம்.பி.க்கள், ஆயுதப் பேர ஊழலுக்குத் தார்மீகப்பொறுப்பேற்று வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று கூச்சல் போட்டனர். இதையடுத்து ராஜ்யசபாவும்வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications