தற்காலிக அமைப்பை துவக்கிய சிதம்பரம் தற்காலிக நீக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

chidambaramசிதம்பரத்துக்கு சிதம்பரம் ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்துள்ளது த.மா.கா.

கருணாநிதியுடன் கூட்டணி வைப்பதற்காக தற்காலிக அமைப்பைத் துவக்கிய சிதம்பரத்தை தற்காலிகமாக கட்சியைவிட்டு நீக்கிவைத்துள்ளது த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எதிராக கருத்துத் தெரிவித்து புதிய அமைப்பைத் துவக்கிய முன்னாள்நிதியமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 4 பேர் அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததைக் கண்டித்து சிதம்பரம் உள்ளிட்ட சிலர் கருத்துத் தெரிவித்தனர். இதில்சிதம்பரம் தலைவர் மூப்பனாருக்கு எதிராக பகிரங்கமாக 2 அறிக்கைகள் விட்டார். ஆனால் அதற்குப் பதில் ஏதும்வராததால், தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பைத் துவக்கினார்.

ப.சிதம்பரத்தின் செயல் குறித்து அதிருப்தியடைந்த கட்சித் தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுகுறித்து விவாதிப்பதற்காக கட்சியின் செயற்குழுக் கூட்டத்தை சென்னையில் புதன்கிழமை கூட்டியது. இதில்ப.சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் குறித்து முடிவு எடுப்பதற்காக அதை கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு கட்சித் தலைவர்மூப்பனார் அனுப்பி வைத்தார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் ஏ.ஆர்.மாரிமுத்து தலைமையில் குழு கூட்டம்வியாழக்கிழமை காலை நடந்தது.

அதில் சிதம்பரம், எம்.எல்.ஏக்கள் புரசைவாக்கம் ரங்கநாதன், காரைக்குடி சுந்தரம், காசிலிங்கம் ஆகிய நான்குபேரையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்வது, அவர்களை கட்சியிலிருந்து ஏன் நிரந்தரமாக நீக்கக் கூடாது என்றுகேட்டு நோட்டீஸ் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாரிமுத்து கூறுகையில், ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் கட்சிக்கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது நிரூபனமாகியுள்ளது. எனவே அவர்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்குள் அவர்கள் பதில்அளிக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+