சென்னையில் நடிகர் ராஜ்குமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் முன்பு கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார்சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக வியாழக்கிழமை சென்னைக்கு வந்தார்.
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராஜ்குமார். சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு கிட்டத்தட்டஇரண்டரை மாதங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின் சென்னைக்கு வந்துஅவர் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தார். பின்னர் சிகிச்சையும் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அவர் வியாழக்கிழமை சென்னைக்கு வந்தார்.சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது, கடந்த முறை வந்த போது சரியாகசிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. விரிவான சிகிச்சைக்காக இப்போது வந்துள்ளேன்.
இந்த பயணத்தின்போது எந்த அரசியல்வாதியையும் சந்திக்கப் போவதில்லை. சிகிச்சைக்காக மட்டுமே இந்தப்பயணம்.
தீவிரவாதி மாறன் பிடிபட்டுள்ளதைப் போல வீரப்பனும் பிடிபடுவானா என்பது குறித்து என்னால் கருத்துச் சொல்லமுடியாது என்றார் ராஜ்குமார்.
பின்னர் அவர் மருத்துவமனைக்குக் காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications