ஊழலை அம்பலப்படுத்திய நிருபருக்கு 1லட்சம் பரிசு
சண்டிகர்:
பாதுகாப்புத்துறையில் நிலவும் ஊழலை அம்பலப்படுத்திய தெகல்கா டாட் காம் நிறுவனத்தின் ஆசிரியர் தருண் தேஜ்பாலிற்கு 1 லட்ச ரூபாயை பரிசளிக்கிறார்கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஒருவர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்வீந்தர் சிங் வராய்ச். தற்போது கனடாவின் டொரண்டோ நகரில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருகிறார்.
தெகல்கா நிறுவனம் அம்பலப்படுத்திய ஆயுத பேர ஊழலுக்காக அதன் ஆசிரியர் தருண் தேஜ்பாலிற்கு 1 லட்ச ரூபாயை பரிசாக அளிப்பதாக அறிவித்தஜஸ்வீந்தர்,
அரசியல்வாதிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோர் ஆயுத பேரங்களில் ஊழல் புரிவதை அம்பலப்படுத்தி உள்ளதுதெகல்கா டாட் காம் நிறுவனம்.
இதன் மூலம் இந்திய பத்திரிகை துறையில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளனர். நாங்கள் தான் தேசியவாதிகள், தாய்நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் எனகூறிக்கொண்டவர்களின் உண்மையான உருவத்தை தோலுரித்து காட்டி உள்ளது தெகல்கா நிறுவனத்தின் வீடியோ.
வட அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தெகல்காவின் இந்த செயல்பாட்டினால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என தெரிவித்தார்.
தெகல்கா நிறுவனத்தின் செயல்பாட்டை இந்திய பத்திரிகைகள் கவுன்சில் தலைவர் பி.பி.சாவந்தும் அங்கீகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications