தி.மு.க. அணியில் பிரச்சனையே இல்லை- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் உள்ள தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணிக் கட்சிகளிடையேதொகுதி பங்கீடில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என தமிழக முதல்வரும்,தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில், தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நிருபர்கள்தொகுதி பங்கீடு விஷயத்தில் அ.தி.மு.கவில் நிலவியது போல் தி.மு.கவிலும்,பிரச்சனைகள் நிலவுகிறாதா என கேட்ட போது கருணாநிதி கேலியாக, நிறையபிரச்சனைகள் இருக்கு சிரித்துக் கொண்டே கூறினார்.

அவர் மேலும் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க.வில் தொகுதி பங்கீடில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.

புதிய நீதிக் கட்சி தலைவர் சண்முகம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில்போட்டியிட விரும்புவதாக கூறப்படுவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.சண்முகத்திடமிருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.

தி.மு.கவின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டபின் அது குறித்து உங்களுக்குதெரிவிப்பேன்.

வன்னிய அடிகளார் என்னுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னும் அ.தி.மு.கவில்சேர்ந்தது வியப்பளிக்கவில்லை என்றார்.

தி.மு.கவின் பொதுச் செயலாளரும் தமிழக கல்வித் துறை அமைச்சருமான அன்பழகன்நிருபர்களிடம் கூறுகையில், தொகுதி பங்கீடில் எந்த விதமான பிரச்சனையும் இலலை.தோழமை கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில்தான் சிறுபிரச்சனைகள் உள்ளது என்றார்.

கருணாநிதியும், அன்பழகனும், தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும்வேட்பாளர்களை நேர்காணல் (இன்டர்வியூ) செய்யும் பணி வியாழக்கிழமையும்தொடர்ந்து நடத்தினர்.

வியாழக்கிழமை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து தி.மு.க. சார்பில்போட்டியிட விரும்பி விண்ணப்பத்திவர்களை இன்டர்வியூ செய்தனர்.

பா.ஜ.கவுக்கு 21, ம.தி.மு.கவுக்கு 21, புதிய தமிழகத்துக்கு 10 தொகுதிகள் உட்படதோழமை கட்சிகளுக்கு தி.மு.க. 77 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது.. மற்ற தோழமைகட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.

வாழப்பாடி தலைமையிலான தமிழக ராஜீவ் காங்கிரஸ், எம்.ஜி.ஆர். அ.தி.மு.க,சிதம்பரம் ஆரம்பித்துள்ள த.மா.கா. ஜனநாயக பேரவை கட்சிகளுடன் திமுகவால்இன்னும் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாட்டை எட்ட முடியவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

யு.என்,ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+