தாமரைக்கனி அதிமுகவிலிருந்து நீக்கம்
சென்னை:
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி கட்சியிலிருந்துநீக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி. இவருக்கு வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில்போட்டியிட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சீட் தர மறுத்து விட்டார். கட்சிக்குள் எதிர்ப்பு இருப்பதால்சீட் தர முடியாது என்று கூறி ஜெயலலிதா சீட் தர மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த தாமரைக்கனி, தனக்கு கட்சியில் டிக்கெட் மறுக்கப்பட்டதால் கவலையில்லை.சுயேச்சையாக நின்று போட்டியிட்டு ஜெயிப்பேன் அல்லது வேறு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவேன் என்றுகூறியிருந்தார்.
இந்த நிலையில், தாமரைக்கனியை கட்சியை விட்டு நீக்கி பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவரது உத்தரவில், அதிமுகவின் கொள்கை, கோட்பாடு, குறிக்கோள்களை மீறும் வகையில், கட்சிக்கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளார் தாமரைக்கனி.
தனது செயலால் கட்சிக்கு தீராத அவப் பெயர் மற்றும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார் தாமரைக்கனி. எனவேஅவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிஉத்தரவிடுகிறேன்.
தாமரைக்கனியிடம் கட்சியைச் சேர்ந்த யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றுஉத்தரவிடுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications