ஜாதிக் கட்சிகள் நிரம்பி வழியும் தி.மு.க. கூட்டணி
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டசபைதேர்தலில் தி.மு.க. தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் ,தோழமை கட்சிகளுக்கு ஒதுக்க்கப்பட்டுள்ள 77 தொகுதிகளில்ஜாதிக்கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்ப்பட்டுள்ளன.
சமீப காலமாக தமிழகத்தில் புற்றீசல் போல் நாள்தோறும் ஜாதிக்கட்சிகள் தோன்றிவருகின்றன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும்ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர 35 தொகுதிகள்ஜாதிக்கட்சிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தி.மு.கவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல்உள்ளது. எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவுக்கும், தமிழக ராஜீவ் காங்கிரசுக்கும் தலா 2தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளதால்அந்த இரண்டு கட்சிகளும் அதிருப்தி அடைந்துள்ளன.
ஜாதிக் கட்சிகளுக்கு நிறைய இடங்களை அள்ளி வழங்கியது போல எங்களுக்கும்நிறைய இடங்கள் வேண்டும் என இக் கட்சிகள் கோருகின்றன. ஆனால், ஜாதிக்கட்சிகளால் ஓட்டாவது கிடைக்கும். இவர்களால் அதிக லாபம் ஏதுமில்லை எனக்கருதும் திமுக தலைமை ஒரு சில இடங்களை மட்டுமே இவர்களுக்குத் தரத் தயாராகஉள்ளது.
இதனால், பல ஆண்டுகளாக திமுகவில் உள்ள திருநாவுக்கரசும், வாழப்பாடியும்வெறுத்துப் போய் உள்ளனர்.
எம்.ஜி.ஆர் அ.தி.மு.க. இந்த மாதம் 24-ம் தேதி கட்சியின் பொதுக்குழு கூட்டத்தைக்கூட்டி தொடர்ந்து தி.மு.க. அணியில் நீடிக்கலாமா அல்லது தேர்தலில் தனித்துபோட்டியிடலாமா என்பது குறித்து விவாதிக்கவிருக்கிறது.
த.ரா.கா., தீரன் தலைமையிலான தமிழர் பா.ம.க., வன்னிய அடிகளார்தலைமையிலான உழவர் உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிவீதம் 3 தொகுதிகள் கொடுப்பதாக தி.மு.க.முடிவு செய்வதாக வந்த தகவலை அறிந்தவன்னிய அடிகளார், பா.ம.க. தலைவர் ராமதாசை சந்தித்து பேசி அ.தி.மு.க.அனியில்இணைந்தார்.
இதனால் த.ரா.கா. மற்றும் தமிழர் பா.ம.க. இரண்டுக்கும் சேர்த்து 3 தொகுதிகள்ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது.
த.மா.காவிலிருந்து விலகி த.மா.கா. ஜனநாயக பேரவை என்ற கட்சியை துவக்கியசிதம்பரத்தின் புதிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்குவதாக தி.மு.க. முடிவு செய்தது.ஆனால் சிதம்பரம் தி.மு.க. அணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாககூறிவருகிறார்.
அவர் 3 தொகுதிகளில் போட்டியிடாவிட்டால், அந்த 3 தொகுதிகளும் எம.ஜி.ஆர்.அ.தி.மு.க. மற்றும் த.ரா.காவுக்கு ஒதுக்கப்படலாம். சிதம்பரம் தன் கட்சியும் தேர்தலில்போட்டியிட வேண்டும் என முடிவெடுத்தால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவுக்கும.த.ரா.காவுக்கும் முன்னர் முடிவு செய்தபடி தலா 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.
எந்த நிலையிலும் தான் போட்டியிடுவதாக முடிவு செய்த 155 தொகுதிகளிலிருந்து 1தொகுதியை கூட விட்டுக் கொடுக்க தி.மு.க. தயாராக இல்லை என்பதுகுறிப்பிடத்தக்கது,
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications