பாஜக செயற்குழுக் கூட்டத்தில் காங்.மீது கடும் தாக்கு
டெல்லி:
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் காங்கிரஸ் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.
இருப்பினும் தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து தெஹல்கா டாட் காம்இணையதளம் அம்பலப்படுத்திய ஆயுதப் பேர ஊழலை பொய் என நிருபிப்போம் என்றனர்.
பாஜகவின் இரண்டு நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பாஜக தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:
தெஹல்கா டாட் காம் இணையத்தளம் ஆயுதப்பேர ஊழலை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து காங்கிரஸ்கட்சியினர் நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் கோஷம் எழுப்பினர். அவர்கள் மிகவும் பொறுப்பற்றவர்களாகநடந்து கொண்டனர்.
பாஜக அரசை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது நோக்கம். ஒரு வாரமாகநாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தது, காங்கிரஸ் கட்சியினரின் பொறுப்பற்ற தன்மையையும்,அநாகரிகத்தையுமே காட்டுகிறது.
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் அவர்கள், வாஜ்பாய் அரசு பதவி விலக வேண்டும் என்று கடும் கூச்சல்போட்டுக் கத்தினர்.
காங்கிரஸ் ஆட்சியின் போது அவர்களது பல தலைவர்கள் மீது பல ஊழல் புகார்கள் கூறப்பட்டது. அப்போது பாஜகவிவாதம் நடத்தக்கோரியும், சம்பந்தப்பட்ட ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரியும் போராட்டம்நடத்தியது. ஆனால் அவற்றையெல்லாம் நிராகரித்தது காங்கிரஸ் கட்சி.
இப்போது தெஹல்கா டாட் காம் இணையதளம், பாஜக அரசு மீது ஆயுதப்பேர ஊழல் புகாரை சுமத்தியுள்ளது.பாஜக எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறது. இதைப் பலமுறை வலியுறுத்தியும் காங்கிரஸ் இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே, தோழமை உணர்வும், புரிந்து கொள்ளுதலும்,நம்பிக்கையும், அனுசரித்துப் போகும் தன்மையும் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒருமித்து தெஹல்கா டாட் காம்இணையதளம் கூறியுள்ள ஊழல் புகாரை எதிர்கொள்ளத் தயாராகி விட்டோம்.
வாஜ்பாய் அரசுக்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம். தெஹல்கா டாட் காம் இணையதளம் எழுப்பிய ஊழல்புகார் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரணைக்குத் தயாராக உள்ளதாகக் கூறியுள்ளது. ஏனெனில் நடந்த உண்மையைவெளிக்கொண்டு வருவதில் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தயாராகஇருக்கின்றன. அதே நேரம் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் பாஜக அரசுமிகவும் உறுதியாக இருக்கிறது.
லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பங்காரு லட்சுமண் குற்றம் செய்யாதவர். விரைவில் உண்மைவெளிவரும். பங்காரு லட்சுமண் மேல் கூறப்பட்ட ஊழல் புகார்கள் பொய்யானவை என்று நிருபிக்கப்பட்டவுடன்அவருக்கு மீண்டும் பாஜகவில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் நாள் விரைவில் வரும் என்றார் ஜனாகிருஷ்ணமூர்த்தி.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications