அவமானத்தில் வாழப்பாடி
சென்னை:
தன் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் தி.மு.க. மீதுஎக்கச்சக்கமான கோபத்தில் இருக்கிறார் த.ரா.கா கட்சி தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி.
தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் த.ரா.கா.கட்சிக்கு 2 தொகுதிகள்மட்டுமே ஒதுக்கப்ப ட்டுள்ளது. இதனால் தான் அவமானப்படுத்தப்பட்டதாக குமுறிப்போய் புலம்பிக் கொண்டிருக்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி.
நேற்று வந்த புதியவர்களுக்கெல்லாம் கேட்ட சீட்டைகொடுத்து விட்டு எனக்கு மட்டும்இரண்டுதானா? அதிக சீட் வேண்டும் என மிட்டாய்க்கு அடம் பிடிக்கும் குழந்தைபோல் தி.மு.கவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார் வாழப்பாடி.
ஆனால் தி.மு.கவோ இதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.பேச்சுவார்த்தைக்கு வந்த த.ரா.காவின் தேர்தல் குழுவினரை வரவேற்கவுமில்லை.உட்காரச் சொல்லவும் இல்லை.
உங்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள்தான் தருவோம். மேற்கொண்டு உங்கள்தலைவரிடம் பேசிக் கொள்கிறோம் என கூறி அவர்களுக்கு பேச கூடவாய்ப்பளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் தி.மு.க. தேர்தல் பணிக்குழுவினர்.
இதனால் அவமானப்பட்டு சுவற்றில் அடிபட்ட பந்து போல் திரும்பிச் சென்றுவாழப்பாடி ராமமூர்த்தியிடம் நடந்ததைைச் சொல்லி அழாத குறையாகபுலம்பியிருக்கின்றனர்.
தன்னையும், கட்சியையும் அவமானப்படுத்தி விட்டதாக கோபம் கொண்டுள்ளார்வாழப்பாடி. தான் அவமானப்படுத்தப்பட்டதை சொல்லி பலரிடம் அவர் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்.
ராமதாசுடன் மோதியதால் அவர் அ.தி.மு.கவில் போய் சேர்ந்து விட்டார். ராமதாசுக்குஎதிராக பேச வாழப்பாடியை பயன்படுத்திக் கொண்ட கருணாநிதி இப்போதுவாழப்பாடியை கண்டு கொள்வதில்லை .
இப்போது அ.தி.மு.கவுக்கும் போக முடியாமல் தி.மு.கவிலும் மரியாதை இல்லாமல்திண்டாடிக் கொண்டிருக்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications