இந்திய பெண்களிடம் விசா கட்டணம் வசூலிக்க இலங்கை திட்டம்
கொழும்பு:
இலங்கையைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கு மூன்று வருடங்களுக்கு மேல் வசித்துவரும் இந்தியப் பெண்களுக்கு வருடாந்திர விசா கட்டணமாக ரூ. 20,000 வசூலிக்க இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஆண்களைத் திருமணம் செய்து கொண்டுள்ள இந்தியப் சேர்ந்தபெண்களின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டும். இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் இந்தியாவைச் சேர்ந்தபெண்கள்.
இதுதவிர மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள் பலர் இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்பேகுடியேறியுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவி, குடும்பங்களுடன் இலங்கையில் வசித்து வருகின்றனர். இதில்ஆண்களுக்கு மட்டுமே இலங்கை அரசு குடியுரிமை வழங்கியுள்ளது. இவர்களின் மனைவியருக்கு குடியுரிமைவழங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து இந்தியக் குடியுரிமையுடன் தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இதுநாள் வரை, இந்தப் பெண்கள் தங்களது விசாவை எவ்விதக் கட்டணமும் இன்றி ஆண்டுக்கு ஒரு முறைபுதுப்பித்து வந்தனர்.
தற்போது இலங்கை அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டப்படி, இந்தப் பெண்கள் ரூ 20,000 செலுத்தினால் தான்ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின் விசா நீட்டிக்கப்படும்.
இதுகுறித்து இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கூறுகையில், 1968 ம் ஆண்டு முதல் நான் இலங்கையில்தங்கியுள்ளேன். இவ்வளவு வருடங்களாக என் மனைவியின் விசாவைப் புதுப்பிப்பதற்காக ஒரு பைசா கூடகட்டவில்லை. இலங்கை அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் அதிகமானது என்றார்.
இலங்கையின் இந்த புதிய திட்டத்துக்கு உள்நாட்டிலும் இந்தியாவிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பும் எனத் தெரிகிறது.
யு.என்.ஐ.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications