ஆஸ்திரேலியாவின் கனவை சிதறடித்த இந்தியா
பெங்களூர்:
ஆஸ்திரேலியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தது. சமீபத்தில் மும்பையில்இந்தியாவை வென்றதன் மூலம் தோடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றமுதல் நாடு என்ற பெயரை பெற்றது.
ஆனால் அதற்கு அடுத்து நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா அபாரமாகஆடி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்குமுற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை உலக கோப்பையை வென்ற அணி என்றபெருமையை பெற்றது, மேற்கிந்திய தீவு அணிகளுக்கு பின் உலக கோப்பையைஇரண்டு முறை வென்ற அணி ஆஸ்திரேலிய அணிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வரை கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணி மட்டும்தான் தொடர்ந்து11 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையைபெற்றது.
ஆஸ்திரேலியா தொடர்ந்து 10 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவுடன் நடந்த ஒரு நாள் போட்டியில் வென்றிருந்தால்மேற்கிந்திய தீவுகள் அணியின் சாதனையை. ஆஸ்திரேலியாவும் சமன் செய்திருக்கும்.
ஆனால் இந்திய அணி அந்த வாய்ப்பை ஆஸ்திரேலியாவுக்கு தரவில்லை. பரபரப்பாகநடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது.
இதன் மூலம் மேற்கிந்தியதீவுகளின் சாதனையை சமன் செய்ய வேண்டும், முறியடிக்கவேண்டும் என்ற ஆஸ்திரேலியாவின் கனவு நனவாகவில்லை.












Click it and Unblock the Notifications