லாரி மோதி தீப்பிடித்த கார்: 2 தொழிலதிபர்கள் பலி
ஈரோடு:
லாரியும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காருக்குள் இருந்த தொழிலதிபர்கள்இருவர் உயிரோடு எரிந்து சாம்பலாயினர்.
ஈரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் காரில் பெங்களூர் சென்றுகொண்டிருந்தனர். சாய்பாபா காலனி நாராயணகுரு ரோட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பால்ராஜ் (30), இவரதுநண்பர்கள் ரபிக் (30), முகமத் தமயம் (40) ஆகிய 3 பேரும் ஒரு மாருதிக் காரில் சென்று கொண்டிருந்தனர்.
குமாரபாளையம் என்ற இடத்தில் இரவு 1.30 மணி அளவில் சென்ற போது லேசான மழைத் தூறல் இருந்துள்ளது.அப்போது வேலூரிலிருந்து திருப்பூருக்கு ஒரு லாரி விறகுகளை ஏற்றிக் கொண்டு வந்தது.
இந்த இரு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் மாருதிக் கார் அப்பளம் போல் நொறுங்கியது.காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த பால்ராஜ், ரபிக் ஆகியோருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது பின் பகுதியில் இருந்த முகமது தமயத்திற்கும் காயம் ஏற்பட்டது. பின் சீட்டில் இருந்ததால் கதவைத்திறந்து கொண்டு முகமது தமயத் காயத்துடன் தப்பினார்.
ஆனால் முன் சீட்டில் இருந்த இருவரும் கதவை திறந்து வெளியேற ற்பட்டனர். ஆனால், கார் அதற்குள்தீப்பிடித்துக் கொண்டது. கதவு திறக்க முடியாமல் போகவே காரில் அமர்ந்திருந்த ரபீக், பால்ராஜ் ஆகியோர்உயிருடன் எரிந்தனர். இதனைக் கண்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனர் தப்பி ஓடினர்.
நண்பர்கள் உயிருடன் எரிவதைப் பார்த்த முகமது தமயத் செய்வதறியாமல் திகைத்து கதறி அழுதார். காப்பாற்றஇயலாமல் போனதால் ரபீக், பால்ராஜ் இருவரும் காரினுள்ளேயே எரிந்து பிணமானார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications