சந்திரிகா பிரான்ஸ் பயணம்: புலிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்குமா?

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்:

பிரான்ஸ் அதிபர் ஜாக்கோஸ் சிராக்கைப் பார்க்க இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புதன்கிழமை பாரிஸ்செல்லவிருப்பதால் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தைதொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்சுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா செவ்வாய்க்கிழமை தலைநகர்பாரிஸ் வருகிறார். அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் வருகிறது. அவருடன் இலங்கைவெளியுறவுத்துறை அமைச்சர் லட்மசுண் கதிர்காமரும் வருகிறார்.

கடந்த 3 மாதங்களில் சந்திரிகா இரண்டாவது முறையாக பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் செல்லும் சந்திரிகாவுக்குபுதன்கிழமை அங்கு விருந்து அளிக்கப்படுகிறது.

இதையடுத்து, இலங்கை, பிரான்ஸ் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தப்பேச்சுவார்த்தையின் போது, பிரான்ஸ் அதிபர் சிராக், விடுதலைப்புலிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையைத்தொடங்குமாறு வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில், நாங்கள் இலங்கையில் அமைதி ஏற்பட முழு ஆதரவுஅளிப்போம். அரசியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்துவிவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சந்திரிகா, பிரான்ஸ் பிரதமர் லியோனல் ஜோசப்பின்னை அவரது அரசு இல்லத்துக்குச் சென்று சந்திப்பார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+