குஜராத்துக்காக பிரான்சில் இசைக்கும் தமிழ் கிடார்
பாரிஸ்:
தமிழ்நாட்டைச் சேர்ந்த கிடார் இசைக் கலைஞரான பிரசன்னா குஜராத் பூகம்ப நிதிதிரட்டுவதற்காக பிரான்சில் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார். இவர் கிடாரிலேயேகர்நாடக இசையை வாசிக்கவுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. மாணவரான பிரசன்னா இசைஞானி இளையராஜா, இசைப் புயல்ஏ.ஆர். ரகுமான் ஆகியோரின் குழுக்களிலும் கிடார் வாசித்து வருகிறார்.
பிரான்சில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரசன்னாவுக்கு பக்க வாத்தியமாக ஏ.கே.பழனிவேல்தவில் வாசிக்கிறார்.
பிரசன்னாவின் முதல் நிகழ்ச்சி பிரான்சின் தென்கிழக்கு நகரான லியானில் நாளை(27-ம் தேதி, செவ்வாய்க்கிழமை) நடக்கவிருக்கிறது. இரண்டாவது நிகழச்சி (28-ம்தேதி) புனித ஆன்ட்ரி லெஸ் வெர்கர்சில் நடக்கிறது. 3வது இசை நிகழச்சி பிரான்சின்வடக்கு நகரான லில்லியில் வியாழக்கிழமை நடக்கிறது.
ஆனால், பிரசன்னாவின் முக்கியமான இசை நிகழ்ச்சி பாரீசில் மார்ச் மாதம் 31-ம் தேதிநடக்கிறது. இந்த நிகழ்ச்சி அடையார் ஹாலில் நடைபெறுகிறது.
பிரசன்னாவின் இசை நிகழ்சியின் மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் குஜராத் பூகம்பநிவாரணத்திற்கு வழங்கப்படும். இசை நிகழ்ச்சிகளை பாரிசில் இருக்கும் திரிவேணிஎன்ற சமூக அமைப்பு, இந்திய தூதரகம் மற்றும் இந்திய சுற்றுலாத்துறையுடன்இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
பாரிசிஸ் இசை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரசன்னா பெல்ஜியம் செல்கிறார்.பெல்ஜியத்தின் தலைநகரான ப்ரசெல்ஸ் உள்ளிட்ட பல நகரங்களில் அவர் இசைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்.
பிரசன்னா 1970ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 2-ம் தேதி கோயம்புத்தூரில் பிறந்தவர்.கர்நாடக இசையை மேற்கத்திய வாத்தியமான கிடாரில் வாசிக்கும் மிகச் சிலரில்பிரசன்னாவும் ஒருவர்.
பிரசன்னா 10 வயதாக இருக்கும் போது கிடார் வாசிக்க ஆரம்பித்தார். கிடார் வாசிக்கஆரம்பித்த இரன்டு ஆண்டுகளுக்குள்ளாகவே தன் ஊரில் பல இடங்களில் நடக்கும்இசை போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
பிரசன்னா கிடாரில் கர்நாடக இசையின் பல ராகங்களையும் அனாயாசமாகவாசிப்பதை கண்ட திருவாரூர் பாலசுப்ரமணியம் என்ற வீணை வித்வான் இவருக்குகர்நாடக இசையை முறைப்படி கற்றுக் கொடுத்தார்.
ஏ.கன்னியாகுமாரி என்ற புகழ் பெற்ற வயலின் வித்வானிடமிருந்து கர்நாடகஇசையின் நுணுக்கங்களை நன்கு கற்றுக் கொண்டார். இவரிடமிருந்து கர்நாடகஇசையை நன்கு கற்றுக் கொண்டபின் பிரசன்னா சிறந்த கர்நாடக இசை வித்வானாகஜொலிக்க ஆரம்பித்தார்.
1989-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் இருக்கும் மியூசிக் அகாதெமியில்தனது முதல் கர்நாடக இசையை அரங்கேற்றினார் பிரசன்னா.
தற்போது பிரசன்னா புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞராக விளங்குகிறார்.
இவையெல்லாவற்றையும் விட பிரசன்னா சென்னையில் இருக்கும் ஐ.ஐ.டியில் படித்துபட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications