பிஜியில் இந்திய காதல் ஜோடி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சுவா (பிஜி):

பிஜியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி, தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

தற்கொலைச் சம்பவம் குறித்துப் போலீசார் கூறியதாவது:

பிஜித் தலைநகர் சுவாவில் பிரபலமான குழந்தைகள் பூங்கா ஒன்றின் அருகே உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த இருவரது சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இந்து பூஜாரி ஒருவர், பிரார்த்தனை செய்வதற்காக அந்தப் பூங்காவுக்குச் சென்றபோது, பூங்காவில் உள்ள மரத்தில்இரண்டு பேர் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். இதையடுத்து அவர் போலீசாருக்குத் தகவல்கொடுத்தார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது, தற்கொலை செய்து கொண்ட இருவரும்காதலர்கள் என்றும், அவர்களது வீடுகளில் காதலுக்கு கடும் எதிர்ப்பு இருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ஆணுக்கு 18 வயதும், பெண்ணுக்கு 16 வயதும் இருக்கலாம் என்று தெரிகிறது.இவர்களது சடலங்களைப் பார்த்ததும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட சிறுவன் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். அந்த சிறுமி பள்ளிக்கூட மாணவி.தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த இவர்களது சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்குகண்டுபிடிக்கப்பட்டன. இருவரும் ஒரே கயிறில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

அந்த சிறுமி அணிந்திருந்த உடையில் காதலுக்குக் கண்ணில்லை என்ற வாசகம் இருந்தது. அந்த சிறுவனின்மொபைல் போன் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. மொபைல் போனின் டிஜிட்டல் ஸ்கீரினில் அவர் தனது காதல்தொடர்பாக சில வாக்கியங்களையும் எழுதி வைத்திருந்தார்.

பிஜியில் இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டுமுதல் 3 மாதங்களில் 33 பேர் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+