316 தமிழக ஹஜ் யாத்ரீகர்கள் சென்னை திரும்பினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த 316 ஹஜ் யாத்ரீகர்கள், தங்கள் புனித பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்து சேர்ந்தனர்.
இது குறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹஜ் புனிதபயணம் சென்றிருந்த 167 பெண்கள் உள்ளிட்ட 316 பேர் சிறப்பு ஹஜ் விமானம் ஏஐ-6114 மூலம் திங்கள்கிழமை அதிகாலை சென்னை வந்து சேர்நதனர்.
இவர்களை வருவாய்த்துறை அமைச்சரும், ஹஜ் கமிட்டி தலைவருமான ரகுமான்கான்விமான நிலையத்தில் வரவேற்றார்.
மீதமுள்ள யாத்ரீகர்கள் 4 குழுக்காக பிரிந்து சென்னை திரும்புவர். முதல் குழு மார்ச்27ம் தேதியும், இன்னொரு குழு ஏப்ரல் 1ம் தேதியும் மூன்றாவது குழு ஏப்ரல் 2ம்தேதியும், நான்காவது குழு 3ம் தேதியும் நாடு திரும்புவார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications