மேட்டூரில் கொண்டாரெட்டி ஜாதி சார்பில் 1000 வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் கொண்டாரெட்டி சமுதாயத்தைச்சேர்ந்த ஆயிரம் பேர் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

கொளத்தூரில் தமிழ்நாடு பழங்குடியினர் நலச் சங்கம், கொளத்தூர் கொண்டாரெட்டி சமூக நலச் சங்கம் ஆகியவைஇணைந்து நிர்வாகக் குழுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு:

கொண்டாரெட்டி இனத்தைப் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். இந்த ஆய்விற்காக மானிடவியல்நிபுணர்கள் அடங்கிய ஒரு குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பவானி, கொளத்தூர் பகுதிகளில் அதிகமான அளவில் உள்ளனர்.

இங்குள்ள மாணவ, மாணவிகள் சாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேலாக சாதிச் சான்றிதழ்வழங்கவில்லை. உடனடியாகச் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கோரி, கோட்டாட்சியர் அலுவலகம்முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும்.

மேலும், கொண்டாரெட்டியின் சமுதாயத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இது தொடர்பாக அரசின்கவனத்தை ஈர்க்கவும் மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஆயிரம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+