கனடா பிரதமரின் ஆலோசகராக இந்தியர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டொரான்டோ:
கனடாவில் வாழும் இந்தியர் ராஜ் சஹால் கனடா பிரதமர் ஜீன் செரிடீயனின் முதன்மை ஆலோசகராகநியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கனடா பிரதமர் செர்ட்டியனின் சிறப்பு ஆலோசகராக இந்தியர் ராஜ் சஹால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போதுகாங்க் ஆபிரஹாம் சஹால் என்ற சட்ட ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார்.
இவர் 1994-98 ம் ஆண்டுகளில் செர்ட்டியன் பிரதமராக இருந்த போது, கனடாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிவிவகாரங்கள் தொடர்பான துறையில் பிரதமரின் உதவியாளராக இருந்தவர்.
எதிர்க்கட்சிகள் பல விஷயங்களில் பிரதமரின் செர்ட்டியனின் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் இந்நேரத்தில்பிரதமரின் சிறப்பு ஆலோசகராக இந்தியர் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications