மைசூர் - சென்னை ரயிலில் கொள்ளை
சென்னை:
மைசூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில், அடையாளம் தெரியாத கும்பல் ஏறி,ரயில் பயணிகளை மிரட்டி நகை மற்றும் சூட்கேஸ்களைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் திங்கள்கிழமை அதிகாலை பங்கார்பேட்-வரதாபுரம் ரயில் நிலையங்களுக்குஇடையில் ரயில் வந்து கொண்டிருந்த போது நடந்தது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், அடையாளம் தெரியாத கொள்ளைக் கும்பல் பங்கார்பேட் ரயில்நிலையத்தில் ரயிலில் ஏறினார். பின்னர் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிற்க வைத்தார்.
இதையடுத்து, அடையாளம் தெரியாத கும்பல் ரயிலில் ஏறி 7 பெட்டிகளில் அமர்ந்திருந்த பயணிகளை கத்தியால்மிரட்டி அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு ரயிலை விட்டு இறங்கித்தப்பித்து விட்டனர்.
கொள்ளைக்கும்பல் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த பயணி ஒருவர் ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் ரயிலில் பாதுகாப்பு போடும்படியும் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து, ரயில் தாமதமாக 6 மணிக்குச் சென்னை சென்று சேர்ந்தது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications