திருவானைக்காவல் கோவிலில் தேர்த் திருவிழா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் தேர்த் திருவிழா திங்கள்கிழமை மிகவிமரிசையாக நடந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் இந்த விழா நடக்கும். உற்சவர் ஜம்புகேஸ்வரர் ஒரு தேரிலும் அகிலாண்டேஸ்வர் அம்மன்இன்னொரு தேரிலும் அமர்ந்திருக்க அந்தத் தேர்களை பக்தர்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் இழுத்தனர்.
கடந்த 6 நாட்களாக நடந்து வந்த விழாவின் உச்ச கட்டமாக இந்த தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. கோவிலைச் சுற்றியுள்ளதெருக்கள் வழியே தேர்கள் வலம் வந்த பின்னர் கோவிலுக்குள் அவை திரும்ப கொண்டு வரப்பட்டனய
நிகழ்ச்சியையொட்டி சிறப்பு ஆராதனைகளும் அபிஷேகங்களும் நடந்தன.












Click it and Unblock the Notifications