2 நாட்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்வு
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர்கள் இன்னும் 2 நாட்களில் தேர்வுசெய்யப்பட்டுவிடுவர் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
டெல்லியில் நடந்த பாரதீய ஜனதாக் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அவரும், தலைவர்டாக்டர் கிருபாநிதியும் திங்கள்கிழமை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்இல.கணேசன் பேசுகையில், செவ்வாய்க்கிழமை வேட்பாளர் தேர்வு துவங்குகிறது. புதன்கிழமை இது முடியும்.
இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிடுவர். வேட்பாளர் தேர்வில் பிரச்சினை ஏதும்இருக்காது. திருச்சி மக்களவை இடைத்தேர்தலில் நாங்கள்தான் போட்டியிடுவோம்.
டெல்லியில் நடந்த தேசிய ஜனநிாயகக் கூட்டணி கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளாததில் பெரியகாரணம் ஏதுமில்லை. தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவர் மும்முரமாக இருந்ததால், அவரால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை (அப்படியா!) என்றார்.
டாக்டர் கிருபாநிதி கூறுகையில், டெஹல்கா நிறுவன பிரச்சினையால் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலானதேசிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்தப் பிரச்சினை பெரிதாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றார் அவர்.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
