குதிரை மிதித்து காயமடைந்த காங். தலைவர் மரணம்
சென்னை:
பெங்களூர் காங்கிரஸ் மாதிாட்டில் கலந்து கொண்டபோது காவல் துறையினரின் குதிரை தாக்கி காயமடைந்ததிருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் இறந்தார்.
பெங்களூரில் சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர் சோனியா காந்திதலைமையில் 2 நாட்கள் இந்த மாநாடு நடந்தது. இதில் திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம்தலைமையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டின்போது கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக குதிரைப்படை போலீஸார் பயன்படுத்தப்பட்டனர்.அப்போது ஆறுமுகத்தை ஒரு குதிரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் பெங்களூர் நிமஹான்ஸ்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால்,அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் பெரியகரைக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் மாலைஅணிவித்து ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications