நிருபர்களுக்கு அல்வா

Subscribe to Oneindia Tamil

கோவை:

பொள்ளாச்சியில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு போலியாக செய்தி கொடுத்தவர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

பொள்ளாச்சியில், பல பத்திரிக்கையின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே,பத்திரிக்கைகளின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் கழகச் செயலர் சண்முகவேலுவுக்கு ஜெயலலிதாஅனுப்பிய கடிதம் போன்று தயாரிக்கப்பட்டிருந்தது.

அதில் சட்டமன்றத் தேர்தலுக்கு மனுக் கொடுத்தவர்களில் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்,வாழ்க்கை குறிப்பு ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெயராமன், சுகுமார் என 6 பேருடைய பெயர்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தது.அதற்கு கீழ் ஜெயலலிதாவின் கையெழுத்தும் நகலில் இடம் பெற்றிருந்தது.

கடிதத்தின் ஜெராக்ஸ், கம்ப்யூட்டரில் டைப் செய்யப்பட்டு பிரதி எடுக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் 12 ம்தேதியிடப்பட்டிருந்தது. இக் கடிதம் பொள்ளாச்சியில் அஞ்சல் செய்யப்பட்டிருந்ததால், இதன் மீது சந்தேகம்ஏற்பட்டது.

அ.தி.மு.க.வில் பலருக்கு இடம் கிடைக்காமல் செய்யவே இந்த ஏற்பாட்டை யாரோ செய்திருப்பதாக தெரிகிறது.இக் கடிதம் பொள்ளாச்சி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+