பிரான்சில் புலிகளுக்குத் தடை விதிக்க சந்திரிகா முயற்சி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

பிரான்சில், புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க, அங்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைஅதிபர் சந்திரிகா, அதிபர் சிராக்கிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா 2 நாட்கள் சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் புறப்பட்டுச்சென்றார்.

பிரான்ஸ் சென்றுள்ள அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்துத் தடை விதிக்க வேண்டும்வேண்டும் என்று பிரான்ஸ்அதிபர் ஜாக்கோஸ் சிராக்கிடம் வலையுறுத்துவார். பாரிசில் விடுதலைப் புலிகளக்கு அலுவலகம் உள்ளதுகுறிப்பிடத்தக்கது.

குமாரதுங்காவுடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமரும் சென்றுள்ளார். இருவரும்,பிரான்ஸ் அதிபர் ஜாக்கோப் சிராக் மற்றும் பிரதமர் லியோனல் ஜோஸ்பின் ஆகியோரை, புதன்கிழமை சந்தித்துப்பேசவுள்ளனர்.

இருவரும், விடுதலைப்புலிகள் பிரச்சனை மற்றும் இரு நாட்டு உறவையும் வலுப்படுத்துவது ஆகியவை குறித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையே, கொழும்பில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளிடம் இலங்கை கோரிக்கை விடுக்கும் என இலங்கை அரசு அதிகாரிஒருவர் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, இலங்கை அதிபர் சந்திரிகா, ஜெர்மன், நெதர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பியநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு கடந்த வாரம்தான் இலங்கை திரும்பினார்.

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில், இலங்கையில் அமைதி ஏற்பட நாங்கள் அனைத்துஉதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

அரசியல், பொருளாதாரம் இரண்டிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இரு நாட்டுஅதிபர்களும் விவாதிப்பார்கள். பிரான்ஸ் அதிபர் சிராக், சந்திரிகாவிடம், இலங்கையில் அமைதி ஏற்படும்வகையில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+