ரஷ்யாவில் இந்தியத் தம்பதி படுகொலை
மாஸ்கோ:
ரஷ்யாவின் வடக்குப்பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த வியாபாரியும்,அவரது மனைவியும் மிகவும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி:
மாஸ்கோவில் வாழ்ந்து வந்த இளம் இந்தியத் வியாபாரி சுப்பராவ். இவர் தேயிலை மற்றும் புகையிலைவியாபாரம் செய்து வந்தார். இவரும், இவரது மனைவியும் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுமிகவும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
அவர்கள் இருவரின் சடலங்களும் பல நாட்களுக்குப்பிறகு, பால்டிக் கடற்கரை அருகே கண்டு பிடிக்கப்பட்டன.
விசாரணையில், அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இவர்களைக் கடத்தி, இவர்களிடமிருந்து 57,000 டாலர்கள்வசூலித்துவிட்டு இவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து பீட்டர்ஸ்பெர்க் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பீட்டர்ஸ்பெர்க்கில் அடிக்கடி, கொலை, கொள்ளை உள்பட பல குற்றங்கள் அதிக அளவு நடந்து வருகின்றன.
சுப்பராவின் கார் டிரைவரும், அவரது சக வியாபாரிகளும் இந்தக் கொலைச் சம்பவத்துக்குக் காரணமாகஇருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சுப்பராவின் கார் டிரைவர் ஸ்ரீநிவாஸ், ரஷ்யாவை விட்டே தப்பித்துச் செல்ல முயலும் போது,மாஸ்கோ ஷிரிமோவோ சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீனிவாஸ் 6 வருடங்கள் சுப்பராவின் வீட்டில் கார் டிரைவராகவும், சமையல்காரராகவும் வேலை செய்து வந்தார்.அப்போது, சுப்பராவுக்கும், ஸ்ரீனிவாசனுக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சுப்பராவின் சகோதரர், இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு வந்து அங்குள்ள இந்தியத் தூதரகத்தைத்தொடர்பு கொண்டு, தனது சகோதரரைக் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்குமாறு கேட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications