ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியா பங்கேற்காது

Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா கிரிக்கெட்: இந்தியா பங்கேற்காதுடெல்லி:

ஷார்ஜாவில் நடைபெறவுள்ள மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒரு நாள் கிரிக்கெட்டில்இந்தியா பங்கேற்காது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் 8-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஷார்ஜாவில் இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை நாடுகள் பங்குபெறும் ஒரு நாள் சக்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்த போட்டிகள் நடைபெறும் சூழல் குறித்து உளவுத்துறை கொடுத்த தகவல்களின்அடிப்படையில் இந்திய கிர்க்கெட் அணிக்கு ஷார்ஜா செல்ல அனுமதிமறுக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில் இந்தியா,ஷார்ஜா போட்டியில் கலந்து கொள்வது தற்போது இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன்இருக்கும் உறவை பொறுத்தது என்றனர்.

சென்ற ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி தொடர் பாகிஸ்தானில்நடைபெற இருந்தது. ஆனால், பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடுவதற்கு ஏற்றசூழ்நிலையை முதலில் உருவாக்குங்கள் என பாகிஸ்தான் அரசிடம் கூறிய இந்திய அரசு,தனது அணி அங்கு செல்வதற்கும் தடை விதித்தது.

ஷார்ஜாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் எனஇந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து முன்ளாள் கிரிக்கெட் அணி கேப்டன் பிஷன்சிங் பேடி கூறுகையில், அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு அரசியல்ரீதியிலான முடிவு.விளையாட்டு என்பதை விளையாட்டு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.இதை அரசியலாக்கக் கூடாது என்றார்.

அடுத்த ஆண்டு 10 நாடுகள் பங்கேற்கும் ஐ.சி.சி. நாக்கவுட் போட்டி நடக்கவுள்ளது.அதை நடத்த இந்தியா அனுமதி கோரியுள்ளது.

தற்போது இந்திய அரசு இந்திய கிரிக்கெட் குழு ஷார்ஜா செய்ய தடைவிதித்திருப்பதாஸ் ஐசிசி நாக்கவுட் போட்டி நடத்த இந்தியாவுக்கு அனுமதிமறுக்கப்படுமா என நிருபர்கள் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை கேட்டனர்.

அதற்கு அவர்கள் பதிலளிக்கையில், இந்திய அரசு ஷார்ஜா செல்ல அனுமதிமறுத்திருப்பது வருந்தமளிக்கிறது. ஆனாலும் ஐசிசி நாக்கவுட் போட்டியை நடத்தஇந்தியாவுக்கு அனுமதி அளிப்பதை இது எந்த விதத்திலும் பாதிக்காது என்றனர்.

ஐசிசி தலைவர் மால்கோம் கிரே சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். இந்திய அரசின்முடிவு குறித்து அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியை ஷார்ஜா போட்டியில்பஙகேற்க அனுமதி மறுத்தது ஐசிசி போட்டியை இந்தியாவிற்கு அனுமதி கொடுக்கும்விஷயத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

கிரே மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா. உள்துறை அமைச்சர் அத்வானி,விளையாட்டுத்துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

அப்போது உமா பாரதி ஐசிசியை இந்தியாவில் போட்டிகள் நடத்துமாறு அழைத்தார்.

ஐசிசி போட்டிகள் இந்தியாவில் நடத்தப்பட்டால் அதில் விளையாட பாகிஸ்தானுக்குஅனுமதி வழங்கப்படுமா என நிருபர்கள் உமாபாரதியை கேட்ட போது, அதற்குபதிலளித்த உமாபாரதி, போட்டிகள் அடுத்த ஆண்டுதான் நடக்கவிருக்கிறது. தக்கமுடிவு தக்க சமயத்தில் எடுக்கப்படும் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+