சிதம்பரத்தின் பதிலுக்கு த.மா.கா. விரைவில் பதில்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பிய நோட்டீசுக்குசிதம்பரம் அளித்த பதில் குறித்து விவாதிக்க மீண்டும் த.மா.கா. ஒழுங்கு நடவடிகைகுழு இரண்டொரு நாட்களில் கூடவிருக்கிறது.
தமிழ் மாநில காங்கிரசின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமானப.சிதம்பரம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை கட்சியிலிருந்துதற்காலிகமாக த.மா.கா. நீக்கியது.
இதற்கு பதிலளித்த சிதம்பரம் தனது பதவி நீக்கத்தை தேர்தல் வரை தள்ளிவைக்குமாறும், த.மா.காவுடன் அ..தி.மு.க.கூட்டணி சேர்ந்ததை தான் எதிர்த்ததைநியாயப்படுத்தியும் பதிலளித்திருந்தார்.
சிதம்பரம் அளித்த பதில் குறித்து விவாதித்து அவரை கட்சியிலிருந்து நீக்கியதில் என்னதவறு என விவாதிக்க த.மா.கா. ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டொரு நாளில் கூடிவிவாதிக்கவிருக்கிறது. இதன் பின்னர் சிதம்பரத்தின் பதிலுக்கு த.மா.கா. பதிலனுப்பும்.
இது குறித்து த.மா.கா. கட்சி நிர்வாகிகள் கூறுகையில், சிதம்பரம் தன் மீது கூறப்பட்டகுற்றச்சாட்டுக்கு எந்த விதமான நேரடி பதிலும் அளிக்கவில்லை. அவர் கட்சிக்குஎதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அவர் மீண்டும் த.மா.கா.- அ.தி.மு.க. கூட்டணியை விமர்சித்திருக்கிறார்.
சிதம்பரம் கட்சி கட்டுப்பாட்டை மீறி தனி கட்சி தொடங்கி, தி.மு.க. தலைவர்கருணாநிதியை சந்தித்து. த.மா.கா. இடம் பெற்றிருக்கும் கூட்டணியை எதிர்த்துபிரச்சாரம் செய்யவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
ஒழங்கு நடவடிக்கை குழு கூடி சிதம்பரத்தை கட்சியிலிருந்து நீக்குவது எனமுடிவெடுத்ததில் எந்த விதமான தவறும் கிடையாது.
ஆனாலும் அவர் நோட்டீசுக்கு அளித்த பதில் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழுமீண்டும் கூடி விவாதித்து அவரை நீக்கியதில் என்ன தவறு என்பது குறித்துவிவாதிக்கும் எனறனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications