தி.மு.க. ஆதரவு விவகாரம்: புதிய நீதிக் கட்சி உடைந்தது
சென் னை:
புதிய நீதிக் கட்சியின் துணைத் தலைவர் சுத்தானந்தன், திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில்செவ்வாய்க்கிழமை சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் அனுமதி பெறாமல் அவர்கருணாநிதியைச் சந்தித்தார்.
சண்முகம் தனியாகப் போட்டியிடலாம் என்று கூறி வருகிறார். இதன்மூலம் அந்தக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது.
ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் அந்தரத்தில் நின்று வந்தது. திமுக கூட்டணியில் இக்கட்சிஇணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக அதிக தொகுதிகள் தர தயாராக இல்லை என்பதால் அந்த அணியில் சேரமாட் டோம் என்று ஏ.சி.சண்முகம் கூறி விட்டார்.
இந் நிலையில் கட்சித் தலைமையின் செயல்பாடு தொண்டர்களைக் குழப்பும் விதத்தில் இருப்பதாக துணைத் தலைவர்சுத்தானந்தன் அறிக்கை விட்டார். இதையடுத்து கட்சிக்குள் பிளவு ஏற்படத் துவங்கியது.
செவ்வாய்க்கிழமை பிளவு அதிகாரப்பூர்வமாக வெளிப்பட்டது. சுத்தானந்தன் மட்டும் தனியாக வந்து கருணாநிதியைச் சந்தித்துதொகுதிப் பங்கீடு குறித்துப் பேசினார். கருணாநிதியுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்பேசு கையில், கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தின் அனுமதி இல்லாமல்தான் கருணாநிதியைச் சந்திக்க வந்தேன்.
புதிய நீதிக் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேசினேன். எனக்கும், ஏ.சி.சண்முகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுஇருப்பது உண்மைதான் என்றார்.
பின்னர் கருணாநிதி வெளியே வந்தபோது அவரைச் சூழ்ந்த செய்தியாளர்கள், புதிய நீதிக் கட்சிக்கு தொகுதிப் பங்கீடுமுடிந்துவிட்டதா என்று கேட்டபோது, பூர்வாங்கமாகத்தான் பேசினோம். வேறு விசேஷம் இல்லை என்றார்.
-
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா?












Click it and Unblock the Notifications