த.மா.காவின் உயிரை வாங்கும் காங்கிரஸ்
சென்னை:
த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. த.மா.கா. போட்டியிட முடிவு செய்துள்ளதொகுதிகள் பலவற்றில் போட்டியிட காங். விருப்பம் வெளியிட்டு உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 47 தொகுதிகள்ஒதுக்கப்பட்டன.
அதோடு 70 தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்த அதிமுக தலைமை அவற்றில் இருந்து 47 தொகுதிகளை தேர்வு செய்ய கூறி இருந்தது.
காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்பும் 15 தொகுதிகளின் பட்டியலை பெற்ற த.மா.கா.விற்க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
த.மா.கா. போட்டியிட உள்ள 30 தொகுதிகளில் முக்கியமான தொகுதிகள் பலவற்றை காங்கிரஸ் கேட்டு உள்ளது.
உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ள மூப்பனாருக்கு அவருடைய கட்சியிலேயேவேலைகள் அதிகம்.
சிதம்பரத்தை கட்சியில் இருந்து நீக்குவது, தற்போது உள்ள எம்.எல்.ஏக்களில் யாருக்கு சீட் ஒதுக்குவது, த.மா.கா. போட்டியிட வேண்டிய தொகுதிகளைதேர்வு செய்வது போன்ற சிக்கலான வேலைகள் அவருக்கு உள்ளன.
இது போதாது என்று மூத்த காங்கிரஸ் தலைவர்களான மரகதம் சந்திரசேகர், திண்டிவனம் ராமமூர்த்தி, அன்பரசு ஆகியோர் தஙகளுக்கு சாதகமானதொகுதிகளை ஒதுக்குமாறு மூப்பனாரை வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால், இரு கட்சிகளுக்கும் சேர்த்து தொகுதிகளை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மூப்பனார் இருக்கிறார்.
த.மா.கா. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கான தொகுதிகளின் பட்டியலை மூப்பனார் அளித்த உடன் பிரச்சனை முடிந்து விடாது. அதில் ஜெயலலிதா தன்பங்கிற்கு கைவைத்து ஏதாவது தொகுதிகளை மாற்றினால் மூப்பனாருக்கு தலைவலி தான்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications