திமுக கூட்டணியிலிருந்து விலகினார் வாழப்பாடி ராமமூர்த்தி
சென்னை:
திமுக கூட்டணியிலிருந்து தமிழ ராஜிவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி விலகினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சென்னையில் புதன்கிழமை அவர் அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற அவரது கட்சியின் அரசியல் விவகார குழுக் கூட்டத்திற்குப்பின் நிருபர்களிடம் பேசியவாழப்பாடி ராமமூர்த்தி, திமுக கூட்டணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
அவர் கூறியதாவது:
ஊழல் புரிந்தவர்களையும், கிரிமினல் குற்றங்களில் தொடர்பு உடையவர்களையும் தனது கூட்டணியில்சேர்த்துள்ள கருணாநிதி, நேர்மையான ஆட்சிக்காக தங்களுக்கு வாக்கு அளிக்க கோருவது அபத்தமானதாகஉள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் புரிந்த கண்ணப்பன், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களை தேசிய ஜனநாயககூட்டணியில் சேர்த்திருக்கிறார் கருணாநிதி.
அது போல், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியே புதிய தமிழகம்கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தான்.
வன்னிய பெண்களின் கற்பை சூறையாட தலித் இளைஞர்களை தூண்டியவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின்தலைவர் திருமாவளவன்.
இவர்களுக்கு எல்லாம் திமுக கூட்டணியில் கருணாநிதி இடங்களை அள்ளிக் கொடுத்துள்ளார். இவர்களை வைத்துக்கொண்டு கருணாநிதி எப்படி நேர்மையான ஆட்சி தர முடியும்? என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் சேலம் தொகுதியில்போட்டியிட்டு வென்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
ஜெயலலிதாவின் தயவால் வாஜ்பாய் மந்திரி சபையில் அவர் பெட்ரோலியத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.அவருடைய பதவி காலத்தில் சேலம் நகரில் கேட்டவருக்கு எல்லாம் கேஸ் கனெக்ஷன் வாங்கிக் கொடுத்தார்.வாழப்பாடியின் தயவால் பலருக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோக உரிமை கிடைத்தது.
ஆனால், வாஜ்பாய் அரசிற்கான தனது ஆதரவை ஜெயலலிதா வாபஸ் பெற்றதை தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது.
பின்னர் நடைபெற்ற தேர்தலில் வாஜ்பாயின் கரத்தை வலுப்படுத்துவேன் என்று கூறிக் கொண்டு திமுக கூட்டணியில்இணைந்து சேலத்தில் போட்டியிட்டார்.
ஆனால், அவருக்கு எதிராக செயல்பட்ட அவருடைய கூட்டணி கட்சியான பா.ம.கவின் புண்ணியத்தால் அத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகித்த வாழப்பாடியின் கட்சிக்கு தமிழக தேர்தலில் 3தொகுதிகள் அளித்தார் கருணாநிதி.
நேற்று வந்த ஜாதிக் கட்சிகளுக்கு அள்ளிக்கொடுத்த கருணாநிதி தனக்கு 3 தொகுதிகள் மட்டும் அளித்ததால்அதனை ஏற்க மறுத்தார் வாழப்பாடி.
தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் இல்லையெனில, தேர்தலில் போட்டியிடாமல் தேசிய ஜனநாயககூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வோம் என கூறி இருந்தார். தற்போது அக்கூட்டணியில் இருந்துமுழுவதுமாகவே விலகுவதாக அறிவித்து உள்ளார்.
திமுக கூட்டணியில் நிலவும் குழப்பங்களால் தொகுதிகள் கிடைக்காமல் முதலாவதாக த.ரா.கா. வெளியேறி உள்ளது.
முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு தலைமையிலான எம்.ஜி.ஆர்.அதிமுக கட்சியும் இதே நிலையில் தான் உள்ளது.
பா.ஜ.கவுக்கு இணையான இடங்கள் கேட்டு போட்டி போட்ட மதிமுக, ஒரு கட்டத்தில் திமுகவை எதிர்த்துபோஸ்டர்களை ஒட்டியது. இதன் மூலம் பா.ஜ.க.விற்கு இணையாக 21 தொகுதிகளை பெற்று விட்டது.
அதே பாணியை கடைப்பிடித்து வருகிறது திருநாவுக்கரசின் கட்சி. எனினும், அக்கட்சிக்கு 2 தொகுதிகளுக்கு மேல்இல்லை என அறிவிக்கப்பட்டு திமுக கூட்டணியின் இறுதி தொகுதி பங்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
இதனால் திருநாவுக்கரசும் வாழப்பாடியின் பாதையில் போவாரா அல்லது கிடைச்சது வச்சு பசியாருவோம் எனதிமுகவிடம் சரண்டர் ஆவாரா என்பது விரைவில் தெரியும்.
கேட்ட இடங்களை ஒதுக்காததால் திமுக கூட்டணியில் இன்று வரை இருக்கும் மதிமுகவும் சந்தோஷமாக இல்லை.
யு.என்.ஐ.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications