தமிழக மக்கள் தொகை 6.25 கோடி: கல்வியறிவு 73 சதவீதம்
சென்னை:
தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 73.47 சதவீதமாக உயர்ந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் இது 54.39 சதவீதமாகத் தான்இருந்தது.
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி கடந்த மாத இறுதியில் நடைபெற்றது. அப்போது பெறப்பட்டதகவல்களை தொகுத்து வருகிறது மாநில கணக்கெடுப்புத்துறை. அதன் தலைவர் சந்திரமெளலி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய தகவல்களைசென்னையில் வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள ஆண்களில் 82.33 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்று உள்ளனர். கடந்த 81ம் ஆண்டில் 40 சதவீதமாக இருந்த பெண்களின் கல்வியறிவுவிகிதம் தற்போது 64.55 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
இத்தகைய நிலைக்கு காரணம் கடந்த பத்தாண்டுகளில் செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கம் மற்றும் வயது வந்தோர் கல்வித்திட்டம் ஆகியவைஆகும்.
கன்னியாகுமரி மாவட்டம் தான் அதிகபட்ச கல்வியறிவு பெற்ற மக்களை கொண்டு உள்ளது. இங்கு கல்வியறிவு பெற்றவர்கள் 88.11 சதவீதம்பேர்.
தர்மபுரி மாவட்டத்தில் மிக குறைந்த அளவாக 59.23 சதவீத மக்களே கல்வியறிவு பெற்று உள்ளனர்.
கல்வியறிவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நீலகிரி, சென்னை மாவட்டங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழக மக்கள் தொகை: நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இருந்தும் கடந்த பத்தாண்டுகளில்தமிழக மக்கள் தொகை 11 சதவீதம் உயர்ந்து 6 கோடியை கடந்து உள்ளது.
தமிழகத்தின் மக்கள் தொகை 6 கோடியே 25 லட்சம். இது நாட்டு மக்கள் தொகையில் 6 சதவீதமாகும். இந்த மக்கள் தொகையில் 1000ஆண்களுக்கு 986 பெண்கள் என்ற வகையில் ஆண்-பெண் விகிதாசாரம் அமைந்து உள்ளது.
மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் தொழில்துறை நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டம். இதற்கு அடுத்த இடம் தமிழகத்தின்தலைநகரை கொண்ட சென்னை மாவட்டம்.
மக்கள் நெருக்கத்தில் சிக்கித் தவிக்கும் மாவட்டம் சென்னை மாவட்டம். மக்கள் நெருக்கம் குறைவாக இருப்பது சிவகங்கை மாவட்டம்.
யு.என்.ஐ.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications