ஜடேஜா வழக்கு : மே 9ம் தேதி விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கிரிக்கெட் விளையாட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்செய்து உள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா.

இம்மனு மீதான விசாரணை மே மாதம் 9ம் தேதி நடைபெறும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைஅறிவித்தது.

கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் ஊழலில் ஈடுபட்டதாக கூறி ஜடேஜா, அஸாரூதின், நயன் மோஙகியா, மனோஜ்பிரபாகர் மற்றும் அஜய் சர்மா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது.

அதன் அடிப்படையில் அவர்களை விசாரிக்க முன்னாள் சிபிஐ இயக்குநர் மாதவனை நியமித்தது இந்தியகிரிக்கெட் வாரியம். அவர்களை விசாரித்த மாதவன், மோங்கியா தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபரிந்துரைத்தார்.

அதன்படி அஸாரூதினுக்கு கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடையும், ஜடேஜாவிற்கு 5 ஆண்டுகள் தடையும்விதிக்கப்பட்டன. அதோடு ஜடேஜாவிற்கு அளித்த அர்ஜுனா விருதை திரும்ப பெறுவது குறித்து மத்திய அரசுநோட்டீஸ் அனுப்பியது.

வாரியம் விதித்த தடை மற்றும் மத்திய அரசின் நோட்டீஸ் ஆகியவற்றை எதிர்த்து ஜடேஜா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது பதில் அளிக்க கால அவகாசம் தேவை என கோரினர்கிரிக்கெட் வாரிய தலைவர் ஏ.சி.முத்தையா மற்றும் விசாரணை அதிகாரி மாதவன் ஆகியோர்.

இதனை அடுத்து வழக்கின் விசாரணையை மே மாதம் 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி விஜேந்தர் ஜெயின்.இந்த வழக்கை தாக்கல் செய்த ஜடேஜா வெள்ளிக்கிழமை தனது நீண்ட நாள் காதலியான அதிதி ஜெட்லியைமணக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+