திண்டுக்கல்லில் ரவுடிக் கும்பல் மோதல்: ஒருவர் எரித்துக் கொலை
திண்டுக்கல்:
திண்டுக்கல் யூசுபியா நகரில் யார் பெரிய ரவுடி என்ற சண்டையில் ஒரு ரவுடி கொலை செய்யப்பட்டுஎரிக்கப்பட்டார்.
திண்டுக்கல் யூசுபியா நகரைச் சேர்ந்தவர் சாகுல் அமீது என்ற குரங்கு சாகுல். வயது 25. சிவகங்கை மாவட்டம்தேவகோட்டையைச் சேர்ந்தவர் ஷேக் என்ற முகமது. வயது 33. இருவரும் பெரிய ரவுடிகள்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதில் யார் ஹீரோ என்பதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 23 ம் தேதி இவர்களும், இவர்களது கோஷ்டியைச் சேர்ந்தவர்களும்ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தினர்.
பின்னர் பெரிய கடை வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சேர்ந்து சாப்பிட்டனர். பில் கொடுப்பதில் இருவருக்கும்தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் சமாதானம் செய்து கொண்டு சென்று விட்டனர்.
அதே நாள் இரவு யானைதெப்பம் சாலை வழியே குரங்கு சாகுல் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஷேக்,அவரது நண்பர்கள் கணேஷ் குமார், ராஜா, மதுரை ரவுடி மாரியப்பனின் சகோதரர் நாகப்பன் ஆகியோர் வந்தனர்.
குரங்கு சாகுலைக் கண்ட அவர்கள், அவரை அடித்துக் கீழே தள்ளினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார் அவர்.மீண்டும் அவரை இழுத்து கத்தியால் குத்தினர். அப்படியும் அவர் உயிர் போகாத காரணத்தால் அக்கும்பல்,சாகுலின் கழுத்தைப் பிளேடால் கீறினர்.
அவர் இறந்தபின் அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். அப்படியும் சில தசைத் துண்டுகள் எரியாமல்இருந்தன. இதையடுத்து எஞ்சிய தசைத் துண்டுகளை கழிவுகள் கொட்டப்படும் கிணற்றில் வீசி எறிந்தனர்.
இதற்கிடையே பல நாட்களாக குரங்கு சாகுலைக் காணாத காரணத்தால் அவரது சகோதரர் போலீசில் புகார்கொடுத்தார். இதையடுத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில் கொலைக்கும்பலில் ஒருவரான இன்னொரு சாகுல், வி.ஏ.ஓ. நடராஜனிடம் சரணடைந்தார். அவரதுவாக்குமூலத்தின் அடிப்படையில் வத்தலகுண்டு பகுதியில் பதுங்கியிருந்த ஷேக், ராஜா, கணேஷ் குமார்ஆகியோரைப் பிடித்தனர்.
ஷேக் வைத்திருந்த கைப்பையிலிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரவுடிக்கும்பல் குரங்கு சாகுலைப் புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். உடனடியாக அப்பகுதியில்பொதுமக்கள் கூட ஆரம்பித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குரங்கு சாகுலின் உடல் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
மதுரை ரவுடி மாரியப்பன் சுட்டுக்கொலை:
சில வாரங்களுக்கு முன் மதுரை ரவுடி மாரியப்பன் உள்பட ஒரு கும்பலைப் போலீசார் சுட்டுக் கொன்றனர்.அப்போது, இந்த ஷேக்கும் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பிய அவரைக் கைது செய்யபோலீசார் வாரண்டுடன் காத்திருந்த நிலையில் இக்கொலையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications