சோனியா தலைமையில் உருவாகும் பெண்கள் படை
டெல்லி:
பீகாரில் ராப்ரி தேவி, தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு அடுத்து மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியுடன்கூட்டணி அமைக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி துவங்கிய மம்தா பானர்ஜியுடன் கூட்டணி அமைக்க புதன்கிழமைடெல்லியில் சோனியாவின் ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒரு காலத்தில் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இன்று அம்மாநிலங்களில் உள்ளலோக்கல் கட்சிகளின் தோளில் சவாரி செய்து வருகிறது.
1967ல் திமுகவிடம் ஆட்சியை இழந்த பின் 1975 முதல் திமுக அல்லது அதிமுக கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணிஅமைத்து போட்டியிட்டு வந்துள்ளது காங்கிரஸ்.
தமிழத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளில்போட்டியிடுகிறது.
கடந்த ஆண்டு பீகாரில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ்லல்லுவின் மனைவி ராப்ரி தேவி ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தது.
தற்போது மேற்குவங்காளத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துபோட்டியிட உள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் மம்தா கட்சித்தலைவர்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான இடங்களே கிடைக்கும்.
ஆனால், அக்கட்சி கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம்போன்றவற்றின் எம்.பி.க்கள் எண்ணிக்கை காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைக்க நேர்ந்தால் உதவியாகஇருக்கும்.
இதன் மூலம் மக்கள் ஆதரவை இழந்தாலும் மத்தியில் ஆட்சியை பிடிப்பதோடு மாநிலங்களிலும் தங்களுக்கு எனஉறுப்பினர்கள் கொண்ட கட்சியாக காங்கிரஸ் இருக்கும். அதே நேரம், தேசிய கட்சி என்ற அந்தஸ்தையும்காங்கிரஸ் தக்க வைத்து கொள்ளும்.
சோனியா கூட்டணி அமைத்துள்ள ஜெயலலிதாவும், மம்தா பானர்ஜியும் தாங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும்என்ற எண்ணம் கொண்டவர்கள். தங்களுக்கு ஒத்து வரவில்லையெனில் கூட்டணியில் இருந்து விலகி சிக்கலைஏற்படுத்திவிடுவார்கள்.
தன் மீதான ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்ய ஒத்துழைக்காத வாஜ்பாய் அரசை 99ல் கவிழ்த்தவர்ஜெயலலிதா.
அது போல், தற்போது வெளியான ஆயுத பேர ஊழல், மேற்கு வங்க தேர்தலில் தன்னுடைய கட்சியின் வெற்றியைபாதிக்கும் என கருதியதால் மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து விலகியவர் மம்தா பானர்ஜி.
இவர்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் சோனியா ஒத்துப் போவார் என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.இதற்கு அவர்கள் காட்டும் உதாரணம், ஓராண்டிற்கும் மேலாக பிரச்சனையின்றி தொடரும் பீகார் முதல்வர் ராப்ரிதேவி- சோனியா காந்தி கூட்டணி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications