மனைவியுடன் சண்டை: 2 குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துகொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் கணவர்.

கோவை செல்வபுரம் முத்துச்சாமி காலனியில் உள்ள மாதாகோவில் வீதியைச்சேர்ந்தவர் துரைசாமி பிள்ளை.

இவரது மகன் பாலசுப்ரமணியம் (35). இவர் ரொட்டி வியாபாரம் செய்து வந்தார்.இவருக்குச் செல்வி என்ற மனைவியும், பானுப்ரியா (8), லலிதா (6), பிரீத்தி (2) ஆகிய3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்ஆத்திரமடைந்த செல்வி, கோபித்துக் கொண்டு தனது இளைய குழந்தையைத் தூக்கிக்கொண்டு ரத்தினபுரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இதனால் மனமுடைந்த பாலசுப்ரமணியம், வீட்டில் இருந்த பானுப்பிரியா, லலிதாஆகியோருக்கு குளிர்பானத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும்விஷத்தை குடித்தார். 3 பேரும் மயக்கமடைந்த நிலையில் அரசு ஆஸ்பத்தரியில்சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+