தமிழகத்தில் மண்டையைப் பிளக்கிறது வெயில்
சென்னை:
கோடை மாத துவக்கத்திலேயே தமிழகத்தில் வெப்பம் உச்சத்தை எட்டியிருக்கிறது.
கோடைகாலத்தில் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பது வழக்கம்தான்.ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பம் அதிகம் எனமக்கள் கூறுவதும் வழக்கமான ஒன்றுதான்.
ஏப்ரல், மே மாதங்களில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டோமார்ச் மாதத்திலேயே வெப்பம் மக்களை கதிகலங்க வைத்துக் கொண்டிகுக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் எல்.கே. சுப்ரமணியம்கூறுகையில், ஏப்ரல்,மே. ஜூன் மாதங்களில் வெப்பநிலை அளவு 34 டிகிரி செல்சியஸ்( 93.2 டிகிரி பாரன்ஹீட்) என்ற வழக்கமான அளவைக் காட்டிலும் 5 அல்லது 6 டிகிரிஅதிகமாக இருக்கும. அப்போது அனல் காற்றும் வீசும். இதன் காரணமாக வெயிலின்கடுமையும் அதிகமாக இருக்கும்.
சென்னையில் சென்ற 2 நாட்களாக வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியிருக்கிறது.மற்ற நகரங்களிலும் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கிறது.
இப்போது வெப்பநிலை அதிகமாக இருப்பாதல் இனி வரும் நாட்களில் வெப்பநிலைஅதிகமாகிக் கொண்டே செல்லும் என கூற முடியாது.
சென்னை மீனம்பாக்கத்தில் புதன்கிழமை வெப்பநிலை 98 டிகிரி என்ற அளவிற்குகுறைந்துள்ளது. வெப்பநிலை அளவில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும்.
காலை நேரத்தில் காற்றில் ஈரப்பதம் இருக்கும். பகலில் குறையும். சென்னையில் மாலைநேரத்தில் கடற்காற்று வீசத் தொடங்குவதால் காற்றில் ஈரப்பதம் அதிகமாகும். வெப்பஅளவு குறையும். ஈரப்பதத்தின் அளவு அதிகரிப்பதால் வியர்வை அதிகமாக இருக்கும்.
மதுரை. திருச்சி. சேலம் போன்ற நகரங்களில் கடற்காற்றுக்கு வாய்ப்பு கிடையாது.அங்ரு வெயில் மாலை வரை தணியாது.
சென்னையில் சென்ற ஆண்டு ஏப்ரல் மாத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் நிலவியது. சென்ற ஆண்டு மே மாதம் அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட்வெப்பம் நிலவியது. 1910ம் ஆண்டுதான் மிக அதிகமாக 113 டிகிரி பாரன்ஹீட்நிலவியது. இந்த அளவை வெயில் அதிகமாகுமா என இப்போதே கூற முடியாது.
வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஜுன் மாதம்தென் மேற்கு பருவமழை வந்தால் குடிநீர் பஞ்சம் தீரும். கடும் வெப்பத்திலிருந்தும்தப்பிக்கலாம் என்றார்.
மற்ற நகரங்களில் வெப்பம் குறைவாக காணப்படலாம். ஆனாலும் அங்கும் மக்களின்துன்பம் குறைவாக இல்லை.
புதன்கிழமை மதுரையில் 105 டிகிரி வெப்பமும், வேலூரில் 105 டிகிரி வெப்பமும்,திருச்சியில் 104 டிகிரி வெப்பமும், சேலத்தில் 102 டிகிரி வெப்பமும், கோவையில் 99டிகிரி வெப்பமும் நிலவியது.
இப்போதே வெயில் இந்த கொளுத்து கொளுத்துகிறது. சித்திரை மாதம் கத்திரி வெயில்என்பார்கள், அதையும் அக்னி நட்சத்திர நாட்களையும் எண்ணி மக்கள் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications