மகனை என்னிடமிருந்து பிரித்துவிட்டார் ஜெ: தாமரைக்கனி புகார்
சென்னை:
எனது மகனை என்னிடமிருந்து பிரித்த ஜெயலலிதாவின் தலைமையை கருணாநிதி மீது சத்தியமாக இனிமேல் ஏற்க மாட்டேன் என்று சபதம் செய்துஇருக்கிறார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.எல்.ஏ. தாமரைக்கனி.
எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தாமரைக்கனி. இவரை எதிர்த்து இவரது மகனை அதிமுக சார்பில்நிறுத்த ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ. சீட்டுக்காக மகனும் தந்தை விட்டுப் பிரிந்துவிட்டதாகத் தெரிகிறது.
தந்தையை எதிர்த்துப் போட்டியிடவும் அவர் தயாராகி வருகிறார்.
கட்சியை விட சொந்த செல்வாக்கால் தனித்து நின்றே ஜெயிக்கக் கூடிய பலம் வாயந்த தாமரைக்கனி கடந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டுவென்றவர்.
அதன்பிறகு அதிமுகவில் இணைந்து அதிமுகவின் சட்டமன்ற தலைவராக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் சென்னையில் புதன்கிழமை அறிக்கை ஒன்றை தாமரைக்கனி வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
நடராஜன் - சசிகலா, ராமராஜன்-நளினி ஜோடிகளை பிரித்தது போல என்னிடம் இருந்து என் மகனை பிரித்து விட்டார் ஜெயலலிதா.
அதிமுக சார்பில் போட்டியிட 25 லட்ச ரூபாய் என்னால் தரமுடியாது. எனது மக்கள் செல்வாக்கை பயன்படுத்தியே போட்டியிடுவேன் என கூறினேன்.
அதனால், என் மகனை எனக்கு எதிராக நிறுத்துகிறார் ஜெயலலிதா. என் மகனிடம் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அவனுடையமாமனார் மூலம் 25 லட்ச ரூபாய் பெற்று உள்ளார்.
தென்மாவட்டங்கள் அதிமுகவின் கோட்டை என்ற ஜெயலலிதாவின் நம்பிக்கை இம்முறை பொய்த்துவிடும். ஜாதிகளுக்குப் பின்தான் கட்சிகளை பற்றிமக்கள் நினைக்கிறார்கள்.
இதனை மறந்து விட்ட ஜெயலலிதாவிற்கு, கன்னியாகுமரி, விருதுநகர், நெல்லை, தூத்துகுடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகியமாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கிடைக்காது.
இனி எக்காலத்திலும் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க மாட்டேன். இது என் தாய் மீது ஆணை. தமிழக முதல்வர் கருணாநிதியின் மீது ஆணை.
தமிழகத்தை ஆளும் தகுதி எம்.ஜி.ஆரின் 40 ஆண்டு கால நண்பரான கருணாநிதிக்கே உண்டு. மீண்டும் அவர் தான் முதல்வராக வர வேண்டும். வருவார் எனதாமரைக்கனி தனத அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications