ஆயுத பேர கமிஷன்...பா.ஜ.கட்சி கணக்கில் சேர்ந்தது
மதுரை:
ஜனா கிருஷ்ணமூர்த்தி முன்னாள் பா.ஜ.க.தலைவர் பங்காரு லட்சுமணன் ஊழல்செய்யவில்லை. கட்சிக்காகத்தான் பணம் பெற்றுள்ளார் என கூறியுள்ளார்.
பா.ஜ.கவின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜனா கிருஷ்ணமூர்த்தி,பா.ஜ.க.தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக மதுரைக்கு சனிக்கிழமைவந்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில், பங்காரு லட்சுமணன் ஆயுத வியாபாரிகள் போல்வேடமிட்டு வந்த தெஹல்கா டாட் காம் இன்டர் நெட் நிறுவனத்தினரிடமிருந்துவாங்கிய பணத்தை கட்சி கணக்கில் செலுத்தியிருக்கிறார்.
ஆயுத பேர ஊழல் விவாகரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் நடக்கவிடாமல் தடை செய்தது தவறு.
அவர்கள் மீண்டும் பதவிக்கு வர வேண்டும் என்றால் அடுத்த தேர்தல் வரை காத்திருக்கவேண்டும். அல்லது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை நடக்கவிடாமல்செய்தது தவறு.
தேசிய ஜனநாயக கூட்டணி தனது 5 ஆண்டு ஆட்சியை பூர்த்தி செய்யும்.
மகாத்மாகாந்தியின் அகிம்சா கொள்கையை பின்பற்ற வேண்டிய காங்கிரஸ் வன்முறைசம்பவங்களில் ஈடுபடுகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருக்கும்பா.ஜ.க. அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
நாட்டின் பல நகரங்களிலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து நடக்கும் வாய்ப்புஉள்ளது. பா.ஜ.கவாலும் திரும்பி தாக்குதல் நடத்த முடியும். ஆனால் பா.ஜ.க. அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட விரும்பவில்லை.
நீதிபதி வெங்கடசுவாமி கமிஷன் தெஹல்கா டாட் காம் ஊழல் புகார் குறித்துவிசாரணை செய்து வருகிறது. எப்படியும் உண்மை வெளிவரும் தவறு செய்தவர்கள்யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications