பணவசூல்: மாணவனை அடித்த 3 ஆசிரியர்கள் மீது வழக்கு
கோவை:
ஓய்வு பெற்ற ஆசிரியருக்குப் பிரிவுபசார விழா நடத்த சக மாணவர்களிடம் வசூலித்த தொகையில் 50 ரூபாய்குறைந்ததற்காக மாணவனை அடித்த 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை, பீளமேடு அருகே உடையாம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஓய்வு பெற்றார்.இந்த ஆசிரியருக்கு பிரிவுபசார நடத்த ஆசிரியர்கள் தீர்மானித்தனர்.
இதற்காக மாணவர்களிடம் நிதி வசூலிக்கும் பொறுப்பை சத்தியராஜ் என்ற மாணவனிடம் ஒப்படைத்தனர்.சத்தியராஜூம் பணத்தை வசூல் செய்தார்.
இந்த மாணவர் வசூல் செய்த பின்னர் அதில், 50 ரூபாய் குறைந்தது. இதையடுத்து ஆசிரியர் அவர் பணத்தை திருடிவிட்டதாக புகார் தெரிவித்து திட்டியுள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவன், தனது வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.உடனே ஆசிரியரை பெற்றோர்கள் சந்தித்து அந்த 50 ரூபாயை கொடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், ஆசிரியர்கள் அதனை பெற்றுக் கொண்ட பின்னரும் மாணவனை அடித்து துன்புறுத்தியுள்ளனர். வனஜா,முத்துக்குமார், குமாரசாமி ஆகிய 3 ஆசிரியர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து மாணவனை துன்புறுத்தியது தொடர்பாக பீளமேடு போலீசில் மாணவன் புகார் செய்தான். போலீசார்3 ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications