கிராம மக்கள் மீது தாக்குதல்: 20 ஆதிவாசிகள் கைது
ஆனைக்கட்டி (கோவை):
கோவை அருகே ஆனைக்கட்டியில் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 20 ஆதிவாசிகளைப்போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே ஆனைகட்டி கிராமம் உள்ளது. இங்கு தூவைப்பதி என்ற பகுதியில் கோவை உயிரியல் பூங்காசங்கம், மற்றும் அரசு சார்பில் 180 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில் 71 ஏக்கர் நிலம் விலைக்கு ஆதிவாசிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட கடந்த 30ம்தேதி பத்திரிக்கையாளர்களை பூங்கா செயலர் ரங்கசாமி வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்கு சென்ற பத்திரிக்கையாளர்கள் சென்ற வாகனங்களை ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்தஆதிவாசிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது கிராம மக்களிடம் பத்திரிக்கையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆதிவாசிகள் தங்களது நிலத்தை பூங்காவினர் ஆக்கிரமித்துக் கொண்டனர் எனவும், தங்களுக்கு அங்குள்ளநிலங்களில் பங்குண்டு என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை எனக் கூறினர். இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில்பத்திரிக்கையாளர்கள் சென்ற வாகனங்கள் தாக்கப்பட்டன. கண்ணாடிகள் உடைந்தன.
பின்னர் இது தொடர்பாக தூவைப் பதி கிராமத்தில், ஆதிவாசிகளுக்கும், தி.மு.க செயலருக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இதில் ஆனைகட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், மயில்சாமி ஆகியோர் காயமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாகத் தப்பிச் சென்ற பத்திரிக்கையாளர்கள், போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதல்தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிரச்னையில் ஈடுபட்ட 20 ஆதிவாசிகளைகைது செய்தனர்.












Click it and Unblock the Notifications