தேர்தல் பிரசாரத்திற்கு முதல்வரின் டிப்ஸ்
சென்னை:
தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் தொடர்பான வேலைகளில் தி.மு.க. தொண்டர்கள் மிகவும் அமைதியாக,பதட்டமின்றி ஈடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தி.மு.க. தொண்டர்களுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
தமிழக சட்டசபைக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான பிரசாரங்களில் ஈடுபடும் தி.மு.க. தொண்டர்கள் மிகவும் அமைதியாக, ஆர்ப்பாட்டமின்றி பிரசாரம்செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கெல்லாம் தொண்டர்கள் செவிசாய்க்க வேண்டாம். ஆயுதப் பேர ஊழல்முதற்கொண்டு பல விஷயங்களில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியினரை விமர்சனம் செய்து பிரசாரம்மேற்கொள்வார்கள்.
அதற்கெல்லாம் தி.மு.க. தொண்டர்கள், ஆத்திரமடையவோ, கோபமடையவோ கூடாது. இந்தத் தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்குத் தான் வெற்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனால் பிரசாரம் மேற்கொள்ளும் தொண்டர்கள்மிகவும் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக முழுமையாகப் பாடுபட வேண்டும்.தி.மு.க. தொண்டர்கள் வன்முறையைத் தூண்டும் செயல்களிலோ, அடிதடி, கலாட்டா போன்ற அசம்பாவிதச்சம்பவங்களை ஊக்குவிக்கும் வகையிலோ பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது.
கருணாநிதியை பாளையங்கோட்டை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்ற வாசகங்களுடன், ம.தி.மு.க.தொண்டர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டிகளைக் கண்டு கலங்கவோ, கோபமடையவோ வேண்டாம். எனதுகொடும்பாவி எரித்தது பற்றியும் யாரும் கோபமடைய வேண்டாம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்கருணாநிதி.
யு.என்.ஐ.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications