தமிழகத் தேர்தலில் ஜாதிக்கட்சிகளின் அணிவகுப்பு
சென்னை:
தமிழகத்தில் வரும் மே 10 ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய கட்சிகளான திமுக,அதிமுக கூட்டணிகளில் பெரும்பாலான ஜாதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக சமீபத்தில்கூட்டணியிலிருந்து விலகி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது. இந்தக் கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும்வன்னிய சமுதயாத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேவர் பேரவையும் ஒரு ஜாதிக் கட்சியே. இதனால் தமிழகத்தில் தேவர்சமுதாய மக்களின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் அதிமுக கூட்டணிக்கு விழும் என்பதில் சந்தேகமில்லை
திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் அமைப்போ தலித் இன மக்களின் பேராதரவு பெற்ற கட்சி. இது இந்தத்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இக்கட்சியில் இடம்பெற்றுள்ள தலித்துக்களுக்கும் தமிழகத்தின்வடக்குப் பகுதியில் வாழும் வன்னியர்களுக்கும் ஜாதிப்பூசல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியில் பள்ளர் சமுதாயத்தினர் அதிகம் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் இருப்பது திமுக கூட்டணியில்.
புதிய தமிழகம் கட்சியினரும், தேவர் பேரவை அமைப்பினரும் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டுக் கொள்வது தென்தமிழக மக்களுக்குப் புதிததல்ல.
யாதவர்கள் அதிகம் மிகுந்த கட்சி கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசம். இதுவும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுஇந்தத் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்துப் போட்டியிடுவோம் என்று கூறி வருகிறதுஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி. இக்கட்சியில் இடம் பெற்றுள்ளவர்கள் முதலியார்கள். மேலும் திமுககூட்டணியில் இடம்பெற்றுள்ளது முஸ்லீம் ஐக்கிய ஜமாத்.
மொத்தத்தில் திமுக, அதிமுக ஆகிய மிகப்பெரிய கட்சியில் பல உதிரி ஜாதிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இக்கட்சிகளுக்கு மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது மட்டுமின்றி இக்கட்சிகளால் திமுக மற்றும் அதிமுககூட்டணிக்கு கணிசமான ஓட்டுக்களும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications