அரசியல் கட்சிகளை உலுக்கும் தேர்தல் ஜூரம்
சென்னை:
தமிழகத்தில் மே 10 ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளநிலையில், தமிழக அரசியல் கட்சிகளை தேர்தல் ஜூரம் பிடித்து ஆட்டுகிறது.
மிகப்பெரிய கட்சிகளான, திமுக, அதிமுக கட்சியினர், இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விடுவதுஎன்று தங்களால் முடிந்த அளவு ஓட்டுக்களைப் பெறும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் மண்டையைப் பிளக்கும் வெயில் அடித்தாலும் அதையெல்லாம் சட்டைசெய்யவில்லை தொண்டர்கள்.சுவரொட்டிகள் ஒட்டுவது, தங்கள் கட்சிக்காக உழைப்பது என முழுமூச்சாய் தேர்தல் வேலைகளில் ஈடுபடஆரம்பித்து விட்டனர் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள்.
அனைவரையும் ரொம்ப நாளாக எதிர்பார்க்க வைத்து, ஒரு வழியாக அதிமுக வுடன் கூட்டணி வைப்பது என்றுமூப்பனார் முடிவெடுத்தார்.
அப்போது அதிமுக வுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து 60 நாட்கள் மட்டுமே செயல்படும்அமைப்பைத் தொடங்கினார் முன்னாள் நிதியமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம்.
அடுத்த சில நாட்களில் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதே ஜோரில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகநீண்ட இழுபறிக்குப் பிறகு திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டார் வைகோ.
தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்று பிரச்சனைகள் ஒவ்வொன்றாய் முடிய தற்போது தேர்தல் பிரசாரத்தில்ஈடுபடத் தொடங்கி விட்டனர் கட்சித் தொண்டர்கள். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள்,அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் பிரார்த்தனை.
யு.என்.ஐ.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications