சரணடையும் புலிகளுக்கு பிரபாகரன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் உள்ளவர்கள், அதிலிருந்து பிரிந்து ராணுவ வீரர்களிடம் சரணடைந்தால் அவர்கள்எங்கிருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்னி அருகே உள்ள மாளவி பகுதியில் நடந்த புலிகள் முகாமில் கலந்து கொண்டு பிரபாகரன் பேசியதாவது:

தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் நமது இயக்கத்துக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் இடையே 18ஆண்டுகளாகச் சண்டை நடந்து வருகிறது.

ஆனால் தற்போது புலிகள் இயக்கத்தில் உள்ள சிலர், ராணுவ வீரர்களிடம் சரணடைகிறார்கள். இதைத் தொடரவிடமாட்டோம். இது போன்ற செயல்கள் புலிகள் இயக்கத்துக்குச் செய்யும் துரோகம்.

ராணுவ வீரர்களிடம் சரணடையும் புலிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் எங்கிருந்தாலும்அவர்களைக் கண்டுபிடித்து சுட்டுக்கொல்வோம். அவர்கள் ராணுவ வசம் உள்ள பகுதிகளில் பதுங்கியிருந்தாலும்அவர்களைக் கண்டுபிடித்து சுட்டுக்கொல்வோம்.

திரிகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் பகுதிகளில் ராணுவ வீரர்களுடன் சண்டையிட்டு வரும் புலிகள்,சரணடைந்தால் அவர்களையும் சுட்டுக் கொல்வோம் என்றார் பிரபாகரன்.

இதற்கிடையே, சமீபத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ராணுவ வீரர்களிடம் சரணடைந்த 17 புலிகளைராணுவம் விடுவித்தது நினைவிருக்கலாம்.

பின்னர் அவர்கள் அரசு பயிற்சி முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவர்களது குடும்பத்தாரிடம்ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் மக்களோடு மக்களாகச் சேர்ந்து விட்டதால் அவர்களை அடையாளம்கண்டுபிடிப்பது மிகவும் சிரமம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கடந்த 12 மாதங்களாக தொடர்ந்து புலிகள் இயக்கத்திலிருந்து பலர் பிரிந்து செல்வது குறித்துபுலிகள் தலைவர் பிரபாகரன் மிகவும் கவலையடைந்துள்ளார்.

கடந்த வருடம் மட்டும் புலிகள் இயக்கத்தில் புதிதாக 600 பேர் சேர்ந்தார்கள். ஆனால் யானை இறவு மற்றும்யாழ்ப்பாணத்தில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 1,500 க்கும் மேற்பட்ட புலிகள்உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+