தமிழ்க்குடிமகன் ராஜினாமா: அதிமுக வில் சேர்ந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் பண்பாடு மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் திமுகவில் இருந்து விலகிஅதிமுகவில் சேர்ந்தார்.

Tamilkudimaganபரபரப்பிற்கு பஞ்சமில்லாத தமிழக அரசியலில் அடுத்த திருப்பம் நிகழந்துள்ளது. திமுக அரசில் இந்துஅறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் தமிழ்க்குடிமகன்.

சபாநாயகர்:

கடந்த 1989ம் ஆண்டு இளையான்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக திமுகவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்அப்போதைய திமுக ஆட்சியில் சட்டசபை சபாநாயகராக இருந்தார்.

இளையாங்குடி தொகுதியில் அவருடைய அரசியல் செல்வாக்கு சரியில்லை எனக் கருதியதால் 1991ம் ஆண்டுதேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

கல்லூரி பேராசிரியர்:

மதுரை யாதவர் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய தமிழ்க்குடிமகன் மதுரை கிழக்கு தொகுதியில் தனது யாதவஇன மக்களின் ஆதரவை நம்பி போட்டியிட்டு தோற்றார்.

பின்னர் 1996ம் தேர்தலில் மீண்டும் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டவர் அதிமுக எதிர்ப்பு அலையால்வெற்றி பெற்றார்.

தேர்தலில் சீட் இல்லை:

அவரை அமைச்சராக நியமித்த கருணாநிதி அவருக்கு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாட்டுத்துறை மற்றும் இந்துஅறநிலையத்துறை ஆகியவற்றின் நிர்வாகத்தை ஒப்படைத்தார். கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சராக இருந்ததமிழ்க்குடிமகனுக்கு தற்போதைய சட்டசபைத் தேர்தலில் இளையான்குடி தொகுதி ஒதுக்கப்படவில்லை.

அத்தொகுதியை தனது கூட்டணி கட்சியான மக்கள் தமிழ்தேசம் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. இதனால்கொதிப்படைந்த தமிழ்க்குடிமகன் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்.

அவரை உடனடியாக சென்னைக்கு வரவழைத்த திமுக தலைமை அவருக்கு வேறு தொகுதி அல்லது திமுகஆட்சிக்கு வந்தால் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி தருவதாக கூறியது.

ராஜினாமா:

அதனை ஏற்க மறுத்து வந்த தமிழ்க்குடிமகன் ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டதோடு திமுகவில் இருந்தும் விலகிவிட்டார்.

போயஸ் தோட்டத்தில் சரண்:

உடனடியாக போயஸ் தோட்டம் சென்ற அவர் அங்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்அதிமுகவில் இணைந்து விட்டார்.

ஜெயலலிதாவை சந்தித்த பின் நிருபர்களிடம் பேசிய தமிழ்க்குடிமகன் தெரிவித்த தகவல்கள்:

1954ம் ஆண்டில் இருந்து திமுக உறுப்பினராக இருந்தவன் நான். என்னுடைய சுயமரியாதை பாதிக்கப்பட்டதால்தான் திமுகவில் இருந்து விலகிவிட்டேன்.

திமுகவில் கருணாநிதி சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் உள்ளார். எல்லா முடிவும் சென்னை மேயர்ஸ்டாலினின் விருப்பத்தின் படியே எடுக்கப்படுகின்றன. நான் ஸ்டாலினை அவரது வேளச்சேரி இல்லத்தில் போய்சந்தித்தது இல்லை. எனவே, என்னை ஓரங்கட்டி விட்டார்கள் என்றார்.

ஏற்கனவே, அடிதடியில் சிக்கி கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியதாக கூறி அமைச்சர் முல்லைவேந்தனைபதவியில் இருந்து விலக்கி விட்டது திமுக தலைமை.

தற்போது தொகுதி ஒதுக்காததால் அமைச்சர் தமிழ்க்குடிமகனும் பதவி விலகியதோடு அதிமுகவில் போய்இணைந்து உள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+